பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

153


மோகம்-அஞ்ஞானம். மோகக்கொடி படர்தலாவது ஆன்மாவாகிய கொடியில் முத்திக்கனி விளையவொட்டாது மூடிக்கொண்டு தானே மேற்பட்டுத் தளிர்த்து அரும்பிக் காய்த்துக் கனிதல், அத்தி பழுத்தலாவது அஞ்ஞானமென்னுங் கொடியில் சுகதுக்கங்கள் விளைந்து இவை காரணமாக மயக்கத்தைச் செய்கிற மாயையாலே பூதகாரியமான உடம்பு பிறப்புத்தோறுந் தோன்றி முதிர்தல் எனவும், "அத்திப் பழம்போல இதாகிதங்கள் மிகுதியும் உளவாதல்’’ எனவும் முன்னுரையாசிரியர்கள் விளக்கத்தருவர்.

இச்செய்யுளின் உருவக அணியினைக் கூர்ந்து நோக்குங்கால் மோகக்கொடி அத்திப்பழம் பழுத்தது எவ்வாறு என ஐயந்தோன்றுதலியல்பு. இச்செய்யுளில் வந்துள்ள "அத்தி பழுத்தது" என்பதற்கு "அத்திப்பழம்' போல இதாகிதங்கள் மிகுதியும் உளவாதல்" எனப் பொருள் கொள்வதனை விட "அவாவென்னும் பழம்பழுத்தது" எனப் பொருள் கொள்ளுதலே பொருத்தமுடையதாகுமெனத் தெரிகின்றது. இவ்வாறு பொருள் கூறுங்கால் "அத்தி" என்பதற்கு அருத்தி, அவா எனப் பொருள் கொள்ளுதல் வேண்டும். அருத்தியென்னும் சொல் "அத்தி" எனவும் இலக்கியங்களில் வழங்குதலுண்டென்பது,

முத்தியாக வொரு தவஞ் செய்திலை
அத்தியாலடி யார்க் கொன் றளித்திலை (5-33-2)

எனவரும் அப்பர் தேவாரத்தால் நன்கு விளங்கும். "முத்திக்கனி பழுக்க வேண்டிய ஆன்மாவென்னும் முதற்கொடியிலே மோகமென்னும் கிளேக்கொடிபடர்ந்து மூடிமறைத்து அவாவென்னும் பழத்தைப் பழுத்தது; பிறவிக்கு வித்தாகிய அப்பழத்தினை யுண்ணாதே” என மாணவர்க்கு அறிவுறுத்தும் நிலையில் அமைந்தது, இத்திருவுந்தியார் பாடலாகும். இதற்கு விளக்கமாக அமைந்தது.


93. முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந்
தத்தி பழுத்த தருளென்னுங்-கத்தியினால்
மோகக் கொடியறுக்க முத்திப் பழம்பழுக்கும்
ஏகக் கொடியெழுங்காண் இன்று.

எனவரும் திருக்களிற்றுப்படியாராகும்.

(இ - ள்) முத்தியாகிய கனி விளைதற்கு இடமான ஆன்மா வென்னுங் கொடியிலே (அநாதியே உயிரை மறைத்துள்ள ஆணவ மலத்தின் காரியமான) அஞ்ஞான மென்னும் கொடி பலவாறாகப் படர்ந்து மூடிக்கொண்டு ஆசையென்னும் பழத்தைப் பழுத்தது. இறைவனது திருவருளாகிய கத்தியினால் மோகக் கொடியினை

20