பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

157


கிம்புருடர் மற்றும்உண்டான அண்டர் முதலாக உள்ளிட்டபேதங்களும் சந்திராதித்தரும் பஞ்சபூத பரிணாமங்களும் பேய்த்தேர் போன்ற வியாபாரங்களும் பொதிந்த திரட்சி ஒர் அண்டமாக வளர்ந்த கோடி அண்டங்களும், இப்படி ஒவ்வோர் அண்டங்களைத் தசமடங்கு பொதிந்த சலமும், இந்தச் சலத்தைத் தசமடங்கு பொதிந்த அக்கினியும், இந்த அக்கினியைத் தசமடங்கு பொதிந்த வாயுவும், இந்த வாயுவைத் தசமடங்கு பொதிந்த ஆகாசமும், இவையெல்லாவற்றையும் சேரப்பொதிந்த பேரண்டத்தையும், இவையெல்லாவற்றிலு மேற்பட்டு நின்மலமாய் நிற்கிற நாதசொரூபத்தையும், இதற்கும் அப்பாற்பட்ட நின்மலமாய் எல்லைப்படாத பரமாகாசமான பெருவெளியையும், உனக்கு உடம்பாகி நின்று உனக்கு நிலை நின்றவாறே உன்னையுணர்த்தின சொரூப உடம்பாகிநின்று. ஆன்ம போதத்தையும் இந்தப்பரிணாமங்களையும் சேர நினைவு அற விடுவாயாக. அப்பொழுதே நீ அகண்ட பரிபூரணனாய் விடுவை என்க” என்பது இத்திருவுந்தியார்க்குத் தில்லைச்சிற்றம்பலவர் எழுதிய உரையாகும்.

“பிருதிவியண்ட முதலாகிய ஆறத்துவாவையும் உனக்குச் சரீரமாகக் கொண்டிருந்து இப்போது கொண்டிருக்கிற சரீரத்தைப் பொருளென்று கொள்ளாதே. இத்தன்மையே குறைவற்று நின்றதன்மை” என்பது பழைய உரையாகும்.

இவ்வுரைப் பகுதிகள் இத்திருவுந்தியாரின் பொருளை விளக்கும் முறையில் அமைந்த பின்வரும் திருக்களிற்றுப்படியார் பாடலுடன் ஒப்புநோக்கிச் சிந்தித்தற் குரியனவாகும்.


95. குற்றமறுத் தென்னையாட் கொண்டருளித் தொண்டனேன்
உற்ற தியானத்துட னுறைவர் - முற்றவரின்
மாட்சியுமாய் நிற்பரியான் மற்றொன்றைக் கண்டிடினக்
காட்சியுமாய் நிற்பார் கலந்து.

இது குருவாய் எழுந்தருளித் தமக்குத் திருவடிசூட்டித் தீக்கை செய்தருளிய இறைவன் தீக்கைக்குப்பின் தியானிக்குந் தியானமும் தாமேயாய் உடனிற்குமாறும் இந்த நிலை முதிர ஞேயத்து அழுந்துமாறும் பிராரத்தம் தாக்காதபடி தாமே காண்பானுங் காணப்படுபொருளுமாய்க் கலந்து நிற்குமாறும் உணர்த்துகின்றது.

(இ- ள்) (இறைவர் இவ்வாறு ஆசிரியத் திருமேனி கொண்டு எழுந்தருளிவந்து) என்னுடைய மலமாயா கன்மங்களாகிய குற்றங்களை வேரறக் களைந்து என்ன அடிமையாகக் கொண்டு திருவடி ஞானத்தை வழங்கியருளி யான் என்றும் அது என்றும் சொல்கின்ற