பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


யுணர்வு நல்கிய ஆசிரியப் பெருமானை நன்றியுணர்வுடன் வாழ்த்திப் போற்றுவதாக அமைந்தது இத்திருப்பாடல்.

(இ-ள்) தன்னுடைய திருவடித்தாமரையானது என்னுடைய சிந்தையிலும் உச்சியிலும் சேரும்படி ஆசிரியத் திருமேனி கொண்டு எழுத்தருளிவந்தவர் எப்பொழுதும் என்போன்றோர்க்கு மெய்யுணர்வளித்து வாழ்வாராக, அருளாகிய சத்தியுடன் வாழ்வாராக எ-று.

“ஒழிவற நிறைந்த தம்பிரானர் அநாதியே அடியேனுக்கு உயிர்க்குயிரா யிருக்க அநாதியே யுண்டான மலத்தின் மிகுதியாலே பிறப்பிறப்புக்களிலே உழன்று போக்குவரவு புரிதலையே பொருளாகக் கொண்டு திரிந்த அடியேனைத் தன்னுடைய பெருங்கருணைத் திறத்தாலே பொருந்திய திருமேனியுடனே யெழுந்தருளிவந்து மலமாயை கன்மங்களும் பிறப்பிறப்புக்களும் என்னைக் கூடாதபடி என்னுடைய பொல்லாப் புலால் தலையிலே யாவராலும் உணர்தற்கரிய திருவடித் தாமரைகளைச் சேரவைத்தும், அந்தத் திருவடி அடியேனுக்கு உயிர்க்குயிராய் உள்நின்ற முறைமையை யுணர்த்தியும் என்னுடைய சிந்தையானது சலிப்பற்று அந்தத் திருவடியிலே விட்டு நீங்காமல் ஒருவழிப்படக் கூடிப் பிரிவற ஒன்றுபட்டு நிற்கும் உபாயத்தைத் தந்தும் இவ்வாறு துன்பக் கடலினின்றும் அடியேனைக் கரையேற்றின தம்பிரானார் காலங்கடந்த இன்பவுருவினராய் வாழ்வார்; (எல்லாவுயிர்களும் ஈடேறுகைப் பொருட்டாக அநாதியே யுண்டான) திருவருளாகிய சத்தியுடனே என்றும் கூடி வாழ்வார்’’ என்பது இத்திருப்பாடலுக்குத் தில்லைச் சிற்றம்பலவர் என்னும் சிவப்பிரகாசனார் தரும் விளக்கவுரையாகும்.

குருவாக எழுந்தருளிய பொருள் ஒன்றேயாயிருக்க அதுவும் சிந்தையும் சென்னியும் ஆகிய ஈரிடங்களிலும் சேரவந்தது என இருவகையாகக் கூறுதல் ஏனெனின், தீக்கையில் ஆசிரியத் திருமேனி கொண்டு எழுந்தருளிச் சென்னியிலே திருவடி சூட்டிய உருவத் திருமேனியையும் தியானநிலையில் உயிர்க்குயிராய்ச் சிந்தையுள் நின்று உணர்த்தும் பேரறிவாகிய அருவத் திருமேனியையும் சுட்டி நின்றது எனவிளக்கம் தருவர் மதுரைச் சிவப்பிரகாசர்.

"வஸ்து ஒன்றாயிருக்க சிரத்தின்மேலும் புந்தியிலும் (சிவப்பிரகாசம்) என்று இருவகையானது ஏதென்னில் தீக்கையிலுண்டான சகளத்தையும் தியானத்திலுண்டான நிட்களத்தையும் என அறிக. இதற்குப் பிரமாணம் சித்தியாரில் 'என்னை யிப்பவத்திற் சேரா வகையெடுத் தென்சித்தத்தே தன்னவைத் தருளினாலே தாளிணை தலைமேற்