பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

169


யுணர்ந்து (பிறவிப்பெருங்கடல் நீந்தித்) திருவடி நெடுங்கரையிலே சேர்ந்து பேரின்பம் நுகர்ந்திருப்பார்கள் எ-று:

உய்யவந்தான் உரை வையம் முழுவதும் மலக்கயம் கண்டிடும் எனவும், இதன் உண்மையுணர்ந்தார் (பிறவிப் பெருங்கடல் நீந்திப் பேரின்பம் நுகர்வர்) எனவும் இரு தொடராக்கி வேண்டுஞ் சொற்களை வருவித்துரைப்பர் முன்னையுரையாசிரியர்கள். வையம் - உலகம்; உலக மக்களையுணர்த்தி நின்றது: இடவாகுபெயர். மலக்ஷயம் என்னும் வடசொல் தமிழ்மொழிக்கேற்ப மலக்கயம் எனத் திரித்து வழங்கப் பெற்றது. மலக்ஷயம் - மலநீக்கம். கண்டிடும் என்புழிக் காண்டல் என்பது செய்தல் என்னும் பொருளினது. மலக்கயம் காணுதலாவது உலகமக்கள் அனைவர்க்கும் ஆணவம் கன்மம் மாயை யென்னும் மும்மலத்தொடர்பினை நீக்குதலைச் செய்தல். உண்மை என்றது பொதுவாக இந்நூலிற் கூறப்பட்ட முப்பொருளுண்மையினையும் இந்நூலாற் சிறப்பாக உணர்த்தப்பெற்ற செம்பொருளாகிய சிவத்தின் உண்மையினையுங் குறித்து நின்றது.

இனி, வையமுழுதும் மலக்கயங்கண்டிடும் என்னும் இத்தொடரில், “கயம்’’ என்பது நீர்நிலை (கடல்) எனக்கொண்டு “உய்யவந்த தேவநாயனார் செய்த திருவுந்தியாரென்னும் இந்நூலினுடைய உண்மையை யறிந்தவர்கள் பிரபஞ்ச முழுதையும் அஞ்ஞான சாகரமாகக் காணக்கடவது” என இப்பாடற்குப் பொருள் வரைந்தார் பழைய உரையாசிரியர். “கண்டிடும்” என்னும் செய்யுமென்னும் முற்று “காணக் கடவது" என வியங்கோளாக இங்கு ஆளப்பெற்றது என்பது அவர் கருத்துப்போலும். “உய்யவந்தானுரையினால் உண்மையுணர்ந்தார் வையம் முழுவதையும் மலக்கயம் எனக் காணக் கடவதாக” என்பது இவ்வுரையின் பொருளமைப்பாகும்.

ஆக்கியோன் பெயரும் நூலின் பெருமையும் பயனும் கூறி இந்நூலினை நிறைவு செய்யுமுறையிலமைந்த இத் திருவுந்தியார் பாடலின் பொருளே அமையத் திருவுந்தியாரின் வழிநூலாகத் திருக்களிற்றுப் படியாரை இயற்றிய திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனர் திருவுந்தியாரின் ௩௪- ஆம் பாடற் பொருளை விளக்கும் பகுதியில்,

“ஆளுடையான் எந்தரமும் ஆளுடையா னேயறியுந்
தாளுடையான் தொண்டர் தலைக்காவல் - நாளுந்
திருவியலூ ராளுஞ் சிவயோகி இன்றென்
வருவிசையை மாற்றினான் வந்து”