பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


தாங்கு எல்லாவற்றையும் உணரும் சிவஞானமும் ஆகிய இவ்வுணர்வு பற்றிய விளக்கங்கள்தான் எவ்வாறு உண்டாகும்? எ-று.

இறைவன் குருவாகத் திருமேனி கொண்டு எழுந்தருளும் திறத்தாலேயே உபதேசப்பரம்பரையினால் ஆகமப்பயிற்சியும், சமய வொழுகலாறுகளும், யோகம் முதலிய நெறிமுறைகளும் இவ் உலகத்து நிலைபெற்று வழங்கி வருவன என அம்முதல்வன் குருவாக எழுந்தருளி வருதலின் இன்றியமையாமையை விளக்கியவாறு.

நானும் என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம்
தானும்தன் தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல்”

எனவும்,

“நானார் என் உள்ளமார் ஞானங்களார் என்னை யாரறிவார்
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல்”

எனவும் வரும் திருவாதவூரடிகள் அனுபவ மொழிகளை அடியொற்றி யமைந்தது, இத்திருக்களிற்றுப்படியார் பாடலாகும். இதனை அடியொற்றியமைந்தது,

ஆரணம் ஆகமங்கள் அருளினா லுருவு கொண்டு
காரணன் அருளானாகிற் கதிப்பவர் இல்லையாகும்
நாரணன் முதலாயுள்ள சுரர்நரர் நாகர்க் கெல்லாம்
சீரணி குருசந்தானச் செய்தியும் சென்றி டாவே.

(சித்தியார் - சுபக் - 65)

எனவரும் சிவஞான சித்தியார் திருவிருத்தமாகும்.


உ. பழக்கங் தவிரப் பழகுவ தன்றி
யுழப்புவ தென்பெணே யுந்தீபற
ஒருபொரு ளாலேயென் றுந்தீபற.

இது குருவின் அருள்வழி அடங்கியொழுகுமாறு கூறுகின்றது.

(இ-ள்) உலகவாதனைகளிலே நெடுநாள் பழகிய பழக்கம் விட்டு நீங்கும்படி ஆசிரியன் அறிவுறுத்திய ஒப்பற்ற திருவருளாலே சரியை கிரியை யோகமாகிய நெறிகளிலே பழகுவதைவிட்டு உலகப் பொருள் நுகர்ச்சிக்காக உழன்று திரிவது என்ன பேதைமையோ பெண்ணே கூறுவாயாக, எ-று.

இப்பாடலில் பெண் என்றது நெஞ்சத்தை என்று கருதுவர் தில்லைச்சிற்றம்பலவர் என்னும் உரையாசிரியர். இதில் “நெஞ்சத்தைப் பெண்ணென்றது ஏனெனில், தன்னிடத்தில் நாயகரான தம்பிரானார் அநாதியாயிருக்க அவருடைய திருவடியைப் பேணாமல், ஐம்புலவேடர் வசத்திலொழுகி நாயகரால் முனியப்படும் மிக்க துயரமாகிய நரக சுவர்க்கங்களிலே உழன்று, அழிவில்லாத