பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

17


இது, பிறப்பிறப் பில்லாப் பேரின்ப நிலையாகிய சிவாநுபவம், எத்தன்மையதாயிருக்கும் என வினவிய மாணாக்கர்க்கு அதன் இயல்பினை விளங்க அறிவுறுத்துகின்றது:

(இ-ள்) குருவருளால் யான்பெற்ற பேரின்பம் எத்தன்மைய தாயிருந்ததென்று எப்படிச் சொல்லவல்லேன்? அதற்கு அதுவே ஒப்பாகவிருந்ததென்று அறிவாயாக. அஃது உயிர்களின் சுட்டறிவினால் அறிந்து கூடத்தக்க அறிவின் எல்லையினதன்று என அறிவாயாக.

எங்ஙன் - எத்தன்மை. ‘இங்கன்’ என்பதும் பாடம். இங்ஙன்- இத்தன்மை. எவ்வண்ணம் - எப்படி. அங்கன் இருந்தது . அப்படியிருந்தது: ஒர் உவமை கூறி விளக்கவொண்ணாத ஒப்பற்ற அத்தன்மையதாய் இருந்தது என்பதாம். சிவாநுபவம் இன்ன தன்மைத்தெனச் சொல்லால் வெளியிட்டுரைக்க வொண்ணாததென்பதனை,

“தடக்கையின் நெல்லிக் கணியெனக் காயினன்
சொல்லுவ தறியேன் வாழி முறையோ
தரியேன் நாயேன் தான்எனைச் செய்தது
தெரியேன் ............ என்னிற்
கருணை வான்தேன் கலக்க
அருளொடு பராவமுதாக்கினன்’’

(திருவாசகம் திருவண்டப்பகுதி)

என உணர்ந்தோர் கூறியவாற்றான் உணர்க.


9. அன்றுமுத லாரேனும் ஆளாய் உடனாகிச்
சென்றவர்க்கும் இன்னதெனச் சென்றதிலை-இன்றிதனை
எவ்வா றிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன்
அவ்வா றிருந்த தது.

இது, மேற்குறித்த திருவுந்தியார் பாடற்பொருளை விரித்து விளக்குகின்றது.

(இ-ள்) தோற்றமில் காலமாகிய அன்று தொடங்கி யாவராயினும் இறைவனுக்கு ஆளாகி அம்முதல்வனது ஏவலாலே படைத்தல் காத்தல் ஆகிய தொழில்களுக்கு வினைமுதலாய் அம்முதல்வனோடு உடன் சென்ற அயன் மாலிருவர்க்கும் அம்முதல்வனுடைய உண்மையான இன்புருவம் இப்படியிருக்குமென்று இன்றளவும் தெரியச் சென்றதில்லை. அங்ஙனமாகவும் திருமால் பிரமன் முதலிய தேவர்களாலும் அறிதற்கரிய இந்தப் பொருளை எப்படியிருக்குமென்று எதனை உவமித்துச் சொல்லவல்லேன்? அப்பொருள் தம்பால் அன்புடைய

3