பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


சிறுத்தொண்டர், சண்டீசர், அரிவாட்டாயர் ஆகிய நாயன்மார் மூவரும், சிவனடியார் திறத்தும் சிவபெருமான் திறத்தும் தாம் கொண்டுள்ள பேரன்பு காரணமாகப் பிள்ளைப்பாசமும் சுற்றத் தொடர்பும் தமது உடற்பற்றும் அற்றொழிய நிகழ்த்திய செயற்கரிய செயல்கள் சிவதன்மவகையுள் வல்வினைக்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளனவென்பதும், இவற்றின் தன்மையினையும் நிகழ்தற் காரணங்களையும் இவற்றால் விளைந்த பயனையும் உலகியல் நோக்கில் வைத்து எத்தகைய நூலளவைகளாலும் ஆராய்ந்து வரையறுத் துரைத்தல் இயலாதென்பதும், இச்செயல்கள் உலகியல் நோக்கிற் பெருங்குற்றங்களாகத் தோன்றுவனவாயினும் உயிருணர்வாகிய பசு போதங்கெட்ட நிலையில் ஓங்குணர்வினுள் அடங்கிப் பசுகரணங்கள் சிவகரணங்களாந் தன்மையினைப் பெற்ற பெருமக்களாற் செய்யப் பெற்றனவாதலின் உணர்வியல் நோக்கில் இவை தவச் செயல்களாகவே கொள்ளத்தக்கன என்பதும் இம் மூன்று திருவெண்பாக்களாலும் முறையே உணர்த்தப் பெற்றன.


21. செய்யுஞ் செயலே செயலாகச் சென்றுதமைப்
பையக் கொடுத்தார் பரங்கெட்டார்-ஐயா
உழவும் தனிசும் ஒருமுகமே யானால்
இழவுண்டோ சொல்லா யிது.

இது தன் செயலற இறைவனது அருள்வழியடங்கிச் செயல் புரிவார்க்கு எத்தகைய வல்வினைத் தொடர்பும் இல்லை யென்கின்றது.

(இ-ள்) தாம் செய்யும் செயலே சிவன் செயலாக அமையும்படி (இறைவனது அருளின்வழிச்) சென்று தம் உடல் பொருள் ஆவியனைத்தையும் உடையானாகிய (இறைவனுக்கே யுரியவாக மெல்ல ஒப்படைத்தவர்கள் (இரு வினைத் தொடக்காகிய) சுமை தீர்ந்தோராவர். ஐயனே, உழவனொருவன் தொழில் புரியும் வயலும் அதன் பயிர்ச் செலவுக்கெனப் பெறும் கடனும் ஒருவரிடத்திலேயே அமையுமானால் அவ்வுழவனுக்கு இழப்பு (நட்டம்) ஏற்படுமோ கூறுவாயாக. அது போலவே (தன் செயலறச் சிவன் செயல் வழியடங்கிப் பணிபுரிதலாகிய) இதுவும் வினைத் தொடக்காகிய சுமைநீங்க வீடுபேறாகிய விளைவினைக் கேடின்றி நல்கும் எ-று.

செய்யும் செயல்-இச் செயலுக்குரிய வினைமுதல் நான் என்னும் உணர்வுடன் உயிர்கள் செய்யும்செயல். செயலாதல்-சிவன்செயலாகத் திருந்துதல். தமைப் பையக்கொடுத்தலாவது

“அன்றேயென்றன் ஆவியும் உடலும் உடைமை யெல்லாமுங்,
குன்றேயனையாய் என்னை யாட் கொண்டபோதே கொண்டிலையோ,
இன்றோரி டையூறெனக் குண்டோ எண்டோள் முக்கண் எம்மானே, நன்றே செய்வாய் பிழைசெய்வாய் செய்வாய் நானே விதற்கு நாயகமே’’