பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

45


சார்ந்ததன் வண்ணமாந் தன்மையதாகிய ஆன்மா எந்தப்பொருளை இடைவிடாது நினைக்கின்றதோ அந்தப்பொருளின் தன்மையதாகும் என்பார், ‘கொண்டவனும் அப்பரிசே கூறுபடும்’ என்றார்.


௧௦. அஞ்சே யஞ்சாக அறிவே யறிவாகத்
துஞ்சா துணர்ந்திருந் துந்தீபற
துய்ய பொருளீதென் றுந்தீபற.

இஃது ஆதாரயோகத்தின் முடிந்த பயனாகிய மந்திரயோகம் உணர்த்துகின்றது.

(இ - ள்) சிவாயநம என்னும் திருவைந்தெழுத்தே இறைவன், திருவருளாகிய சத்தி, ஆன்மா, எழில்மாயை, மலம் என்னும் ஐந்து பொருளின் இயல்பினைப் புலப்படுத்துவனவாக அவற்றை உள்ளவாறுணர்ந்த உயிரறிவு சிவஞானத்தோடு ஒன்றிப் பொருந்த மலவிருளிலே உறங்காமல் திருவருளாலே பரம்பொருளை இடைவிடாது தியானித்திருப்பாயாக. செம்பொருளாகிய இது தன்னையொன்றும் ஊடுருவவொண்ணாத் தூய்மை வாய்ந்ததென்று உணர்வாயாக எ-று.

அஞ்சு - திருவைந்தெழுத்து. அஞ்சு ஆதல் - அதனால் உணர்த்தப் பெறும் பொருளாகத் தோன்றுதல். அறிவு - உயிரறிவு. அறிவாதல் - சிவஞானத்தோடு பொருந்தி ஒன்றாதல். துஞ்சுதல் - மலவாதனையிலே உறங்குதல், துஞ்சாது உணர்ந்திருத்தலாவது, மலவிருளிற்பட்டு உறங்காது திருவருள்ஞானத்தால் மெய்ப்பொருளை ஒன்றியுணர்ந்து இன்புற்றிருத்தல், துய்ய - தூய. இத்திருவுந்தியாரின் பொருளை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது பின்வருந் திருக்களிற்றுப்படியாராகும்.


25. அஞ்செழுத்து மேயம்மை யப்பர்தமைக் காட்டுதலால்
அஞ்செழுத்தை யாறாகப் பெற்றறிந் - தஞ்செழுத்தை
யோதப்புக் குள்ள மதியுங் கெடிலுமைகோன்
கேதமற வந்தளிக்குங் கேள்.

இது திருவைந்தெழுத்தினை அறிவால் எண்ணுதலாகிய மத்திர யோகத்தை அறிவுறுத்துகின்றது.

(இ. ள்) திருவைந்தெழுத்தே சத்தியையும் சிவனையுங் காட்டுகின்றபடியினாலே அத்திருவைந்தெழுத்தைப் பேரின்பத்திற்கு வழியென்று அறிந்துகொண்டு (அசைவற்று ஒரிடத்திலிருந்து) திருவைந்தெழுத்தை ஒதத் தொடங்கினால் ஆன்மபோதங்கெடும். கெட்ட