பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


காலத்தில் விளங்கித் தோன்றி நாளடைவில் மறைந்தொழியும் நிலையில்பொருள்களாம் ஆதலின் யாண்டும் மாறா வியல்பினதாதாகிய சிவம் அப்பொருள்களுள் ஒன்றாதல் இல்லை எனத் தெளிவிப்பார், ‘நாட்டுற்று நாடும் பொருளனைத்தும் நானாவிதமாகத் தேடும் இடம் சிவம் அன்று’ என்றார், -

சிவமாகிய பரம்பொருள் ஆன்மவறிவினாற் சுட்டியுணரத் தக்க பொருளாயிருக்குமானால், அங்ஙனம் உணரப்படும் உலகப்பொருள்கள் போல அழிபொருளாகிய அசத்தாகும், எவ்வாற்றானும் அறியப்படாத பொருளாயிருக்குமானால், முயற்கோடு போல இல்பொருளாகும், இவ்விரு பகுதியுமின்றிப் பாசஞான பசுஞானங்களால் அறியப்படாமையும் பதிஞானம் ஒன்றினாலேயே அறியப்படுதலுமாகிய இருதிறத்தாலும் சிவம் என்றும் ஒருநிலையிலுள்ள உள்பொருளேயாம் என்பது புலப்படுத்துவார், ‘நாடும் பொருளனைத்தும் நாட்டுற்று நானாவிதமாகக் தேடுமிடும் சிவமன்று’ எனவும் ‘ஓட்டற்றுநின்ற உணர்வு பதிமுட்டித் தேட்டற்று நின்ற இடம் சிவம்’ எனவும் இருதொடரால் விளக்கியுரைத்தார். இத் திருக்களிற்றுப்படியாரை அடியொற்றிப் பதிப்பொருளிலக்கணங் கூறுவது,

“உணருரு அசத்தெனின் உணரா தின்மையின்
இருதிறன் அல்லது சிவசத் தாமென
இரண்டு வகையின் இசைக்குமன் னுலகே”

எனவரும் சிவஞானபோத ஆறாஞ் சூத்திரமாகும்;


க௪. “கிடந்த கிழவியைக் கிள்ளி யெழுப்பி
உடந்தை யுடனேநின் றுந்தீபற
உன்னையே கண்டதென் றுந்தீபற.”

இது, திருவருள்ஞானத்தைக் குருவருளால் அறிந்து தற்போதங் கெட நிற்றலே சிவம் பிரகாசித்தற்குரிய முறையாம் என்பது உணர்த்துகின்றது.

(இ-ள்) ஆன்மாவினுடனே தோற்றமில்காலமாக மறைந்து நிலைபெற்றுள்ள சிவசத்தியாகிய அன்னையை ஆசிரியன் ஒளியுடன் தோன்றுமாறு தூண்டி யெழுப்ப, அந்தச் சிவஞானத்துடனே கூடி அத்திருவருள் வழியே நிற்பாயாக. அங்ஙனம் திருவருளுடன் இசைந்து உடன் நிற்கவே சிவமானது உன்னையே கண்டு தன்பால் சர்த்துக் கொள்ளாநிற்கும் எ-று.

கிடத்தல் - மறைந்துகிடத்தல்; உயிர்க்குயிராயுள்ள சிவபரம்பொருளோடு பிரிவின்றியுள்ள கேண்மையுடையது திருவருளாகிய சத்தியென்பார், கிழவி என்றார், கிழவி-(சிவத்திற்பிரிவிலா) உரிமையுடையாள், கிள்ளி எழுப்புதலாவது, ஆன்மாவின்கண்ணே சிவ