பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்



இவ்வாறு இறைவன் திருவருளால் சிவயோகிகளின் அகத்தே தோன்றும் ஒலிகட்கெல்லாம் காரணமாகத் திகழ்வது துயிலும்பொழுதில் ஆடும் சோதியாகிய கூத்தப்பெருமானது திருவடியிலுள்ள திருவருள்மயமான சிலம்பொலியேயென்பதும் திருவடிச் சிலம்பொலியாகிய அதனைக்கேட்டு அகமகிழ்வார்க்கு அம்பலக் கூத்தன் நேரே தோன்றி அருள்புரிவன் என்பதும்,

சீரார் திருவடித் திண் சிலம்பு சிலம்பொலிக்கே
ஆராத ஆசையதாய் அடியேன் அகமகிழத்
தேரார்ந்த வீதிப் பெருந்துறையான் திருநடஞ் செய்
பேரானந்தம் பாடிப் பூவல்லி கொய்யாமோ. (18)

எனவரும் திருவாசகத்தால் இனிது புலனாம். திருச்சிலம்போசை ஒலி வழியே சென்று நிருத்தனைக் கும்பிடும் சிவயோகநெறியில் ஒழுகியவர் சேரமான் பெருமாள் நாயனார் என்பது,

“வாசத் திருமஞ்சனம் பள்ளித் தாமம் சாந்தம் மணித்தூபம்
தேசிற் பெருகுஞ் செழுந்தீபம் முதலாயின வுந்திரு வமுதும்
ஈசர்க் கேற்ற பரிசினால் அருச்சித் தருள எந்நாளும்
பூசைக் கமர்ந்த பெருங்கூத்தர் பொற்பார் சிலம்பி னொலியளித்தார்” -

(பெரிய-கழறிற் - 24)

எனவரும் சேக்கிழார் நாயனார் வாய்மொழியால் இனிதுணரப்படும். நேர்பட நிற்றலாவது, மாறிநின்று மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியாகிய சிறுநெறியிற் செல்லாது திருவருள் வழியாகிய செந்நெறியினை மேற்கொண்டொழுகுதல்.

‘திருச்சிலம்போசை யொலிவழியே’ என்னும் இத்திருவுந்தியார்க் கமைந்த உரை விளக்கமாகத் திகழ்வது பின்வரும் திருக்களிற்றுப்படி யாராகும்.


33. ஒசையெலாம் அற்றால் ஒலிக்குந் திருச்சிலம்பின்
ஓசை வழியே சென்றொத்தொடுங்கில் - ஒசையினின்
அந்தத்தா னத்தான் அரிவையுடன் அம்பலத்தே
வந்தொத்தா னத்தான் மகிழ்ந்து.

இது, நிருத்தனைக் கும்பிடும் நெறியிதுவென வுணர்த்துகின்றது.

(இ-ள்) (உடல் பொறி கருவிகளால் நேரும் உலகத்துழனிகளா யுள்ள) ஆரவாரங்கள் ஒடுங்கினால் இறைவன் திருவடியிற் பரவிந்து என்னும் சிலம்பிற் பரநாதமென்னும் ஓசை தோன்றும். அங்ஙனம்