பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வைக்கப் பெற்றிருத்தல் காணலாம். மெய்கண்டார் அருளிய சிவஞான போதத்தில் திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் என்னும் இவ்விரு நூல்களின் பொருள் முடிபுகள் ஆங்காங்கே எடுத்தாளப் பெற்றிருத்தலைக் கூர்ந்து நோக்குங்கால் இவையிரண்டும் சிவஞான போதத்திற்குக் காலத்தால் முற்பட்டன என்பது நன்கு தெளியப்படும். சிவஞானபோதத்தை இயற்றிய மெய்கண்டார் காலம் கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டெனத் துணியப்படுதலால் திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் ஆகிய இந்நூலாசிரியர்களின் காலம் கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது எனத்தெரிகிறது.

திருவுந்தியாரின் வழிநூலாகிய திருக்களிற்றுப்படியாரில் திருத் தொண்டத்தொகை அடியார்களின் வரலாற்றுச் செய்திகள் எடுத்தாளப் பெறுதலால் திருக்களிற்றுப்படியார் இயற்றிய திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனாரும், அவருடைய ஆசிரியர், ஆளுடைய தேவநாயனாருக்குத் திருவுந்தியாரை உபதேசித்து அருளிய திருவியலூர் உய்யவந்த தேவநாயனாரும், திருத்தொண்டர் புராண ஆசிரியர் சேக்கிழார் நாயனார் காலத்தை ஒட்டிக் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் நிலவிய அருளாசிரியர்கள் எனக் கருதுதல் பொருத்தமுடையதாகும். கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் பரஞ்சோதி மாமுனிவர் உபதேசத்தின் வழியே தோன்றி வளர்ந்த மெய்கண்டதேவர் சந்தானமாகிய உபதேச பரம்பரையின் தோற்றத்திற்கு முன்னரே திருவுந்தியார் இயற்றியருளிய உய்யவந்த தேவரைக் குருவாகக்கொண்ட சைவசித்தாந்த சந்தான பரம்பரையும் தோன்றி வளர்ந்திருந்ததென்பது திருவுந்தியார்-திருக் களிற்றுப்படியார் வரலாற்றால் புலனாகின்றது.


திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார் வரலாறு

—❖❖—

"எல்லாம் வல்ல சிவபெருமான் ஆன்மாக்களுக்குச் சிவாநுபவம் விளையும் நிமித்தமாக (மானிடத் திருமேனிகொண்டு) உய்யவந்த தேவ நாயனர் என்னுந் திருநாமத்தையும் சாத்திக்கொண்டு வடவேங்கடந் தென் குமரி யெல்லைக்குள்ளே சஞ்சாரம் பண்ணுங்காலத்து ஒரு நாள் திருவியலூரிலே எழுந்தருளினர். அவ்வூரிலேயிருக்கிற ஆளுடைய தேவநாயனர் (அவரைக் கண்டு தெரிசித்த போது அவருடை மலபரி பாகத்தையறிந்து தீக்கை பண்ணி ஞானோபதேசமும் பண்ணி, திருவுந்

ii