பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


ஊனி லுயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர்
ஞான விளக்கினை யேற்றி நன்புலத்
தேனை வழிதிறந் தேத்துவார்க்கிட
ரான கெடுப்பன வஞ்செழுத்துமே - (3-22-3)

புரணம் பூரணம் எனக் கொண்டு அவ்வேகதேச அறிவு கூடாமை பூரணம் வந்து கூடும் எனப் பொருள் கொள்ளுதலுமுண்டு.


உ௩. கள்ளரோ டில்ல முடையார் கலந்திடில்
வெள்ள வெளியாமென் றுந்தீபற
வீடு மெளிதாமென் றுந்தீபற.

இவ்வாறு சிவசமாதி கூடினார் சுத்தநிலையினராய் வீடும் எளிதாகப் பெறுவர் என்கின்றது.

(இ-ள்) உள்ளங்கவர் கள்வராகிய தம்பிரானருடன் தேகமாகிய இல்லத்தையுடைய ஆன்மாவும் பொருந்தி ஒருவழிப்பட்டால் ஆறு அத்துவாக்கள் வழியாகத் தேடிய வினைக் குவியலனைத்தும் கவரப்பட்டு இவனுடைய உள்ளமும் வெளிக்கு வெளியாய்ப் பரமாகாசமாகி விடும். ஐம்புல வேடர்களாற் கவர்ந்து கொள்ளப்படாத வீடுபேறும் இவனுக்கு எளிதாகக் கிடைக்கும் எ- று.

“தோன்றாதுநிற்றல் பற்றிக் கள்வன் என்றார், கள்வனென்றது, கண்ணுக்கு உயிர் மறைந்து நின்றே காட்டுவதாகலான் அது தன்னையும் உயிரையும் அறியமாட்டாதாயிற்று; அதுபோல முதல்வன் இதுகாறும் மறைந்து நின்றே உணர்த்துதலின் உயிர் தன்னையும் முதல்வனையும் அறியமாட்டாதாயிற்று என்பதுபட நின்ற குறிப்பு மொழி. உள்ளத்திற் காணவல்லார்க்கு அக்கள்ளந் தீர்தலின் தம்மையும் முதல்வனையும் காண்டல் கூடுமென்பதாம். “கள்ள ரோடில்லம்... உந்தீபற” என்றது இக்கருத்து நோக்கி” என்பர் சிவஞானமுனிவர்.

“வெள்ளநீர்ச் சடையினர்தாம் வினவுவார் போல வந்தென்
உள்ளமே புகுந்து நின்றார்க் குறங்கு நான் புடைகள் போந்து
கள்ளரோ புகுந்தீரென்னக் கலந்துதான் நோக்கி நக்கு
வெள்ளரோம் என்று நின்றார் விளங்கிளம்பிறையினாரே” - (4-75-9)

எனவரும் அப்பர் அருள்மொழியின் பொருளை இத் திருவுந்தியார் தன்னகத்துக் கொண்டு திகழ்தல் காண்க.