பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 தியார் என்று பேரிட்டு நாற்பத்துநாலு செய்யுளாக ஒரு நூலும் பண்ணி, அந்த நூல் முடிவிலே தம்முடைய பெயர் தோன்ற ஒரு செய்யுளும் பண்ணி அந்தநூலினுடைய தாற்பரியத்தையும் உள்ளபடி யறிவித்துச் சிறிது நாள் சென்று தன்னியல்பையடைந்தார்’’.

“பின்பு ஆளுடைய தேவநாயனார் முன் சொன்ன எல்லைக்குள்ளே சஞ்சாரம் பண்ணுங்காலத்து ஒருநாள் திருக்கடவூரிலே எழுந்தருளினார். அவ்வூரிலே ஆட்டுவாணியக் குலத்திலே உற்பவித்தவரொருவர் (அவரைக்) கண்டு தெரிசித்த போது அவருடைய மலபரிபாகத்தை யறிந்து தீக்கை பண்ணித் தம்முடைய ஆசாரியருடைய பெயரையுஞ் சாத்தித் திருவுந்தியார் என்கிற சாத்திரத்தையும் அறிவித்துச் சிறிது நாள் சென்று தன்னியல்பையடைந்தார். பின்பு அந்தத் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனர் முன் சொன்ன எல்லைக்குள்ளே சஞ்சாரம் பண்ணுங் காலத்திலே ஒருநாள் சிதம்பரத்திலே எழுந்தருளினர். அவ்வூரிலே யொருவர் ஞானம் பெற வேண்டித் தலவாசம் பண்ணியிருந்து இவரைக்கண்டு தெரிசித்த போது (இவர் அவரது) மலபரிபாகத்தை யறிந்து தீக்கை பண்ணித் திருவுந்தியாருக்கு வழிநூலாகத் திருக்களிற்றுப்படியார் என்று நூறு செய்யுளாக ஒரு நூலும் பண்ணி யறிவித்துத் தன்னியல்பையடைந்தார்.”

“திருக்களிற்றுப்படியார் என்பதற்குக் காரணம், இவர் நூல் பண்ணின காலத்து இவர் கீழ்ச்சாதியென்றும் இவருடைய நூல் கைக்கொள்ளலாகா தென்றுஞ் சிறிது பேர் சொல்ல, சிறிது பக்குவரா யுள்ளவர்கள் அந்த நூலைப் பஞ்சாக்கரப்படியிலே கொண்டுபோய் வைத்தார்கள். அந்தப்படியிலே செய்திருக்கின்ற கல்லானை (அந் நூலைத்) துதிக்கையாலே யெடுத்து எல்லாவற்றுக்கும் மேற்படியிலே கொண்டுபோய் வைத்தது. ஆகையால் (இந்நூல்) அப்பெயர் பெற்றது”.

“இந்தச் சந்தான பரம்பரையை இப்படிக் கண்டுகொள்க” என்பது இவ்விரு நூல்களின் பழைய உரையாசிரியராகிய தில்லைச் சிற்றம்பலவர் உரையிற் காணப்படும் பழைய வரலாறாகும். இவ் வரலாற்றினைக் கூர்ந்து நோக்கின் கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் தோன்றி நிலைபெற்ற மெய்கண்ட சந்தானத்தினுங் காலத்தால் முந்தியது திருவுந்தியார் அருளிய திருவியலூர் உய்ய வந்த தேவ நாயனர் உபதேச பரம்பரை என்பது நன்கு புலனாம்.

திருவுந்தியார் தோன்றிய காலம் கி. பி. 1147 என்றும், திருக் களிற்றுப்படியார் காலம் கி. பி. 1177 என்றும் கூறுவர் அனவரத விநாயகம் பிள்ளை முதலிய ஆராய்ச்சியாளர்கள்.

iii