பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


“ஓவாமையன்றேயுடல்” எனப் பாடங்கொண்டு பிராரத்த நாசம் பிறந்து தேகம் விட்டபொழுதிலே திருவடியிலே இரண்டற்று விடுமதொழிந்து மீண்டுந் தேகம் எடுக்கமாட்டாதன்றே" எனப் பொருள் வரைந்தார் தில்லைச்சிற்றம்பலவர்.


45. தன்னைப் பெறுவதன்மேற் பேறில்லை தானென்றுந்
தன்னைத்தான் பெற்றவன்றான் ஆரென்னிற் - றன்னாலே
எல்லாந்தன் உட்கொண்டு கொண்டதனைக் கொள்ளாதே
எல்லாமாய் நிற்கு மிவன்.

இது, சிவப்பேறாகிய வீடுபேற்றின் இயல்பினை விளக்குகின்றது.

(இ-ள்) ஒருவன் பெறத்தக்க பேறுகளிலே தான் அழிந்து போகாமல் அருளாலே தன்னை உறுதியாகப் பெறுகின்ற பேற்றின்மேல் வேறு பேறில்லை. தானென்றும் தன்னைத்தான் பெற்றவனென்றும் இரண்டாக இவ்விடத்திற் சொன்னது யாராமென்னில், ஆன்மா தன்னையறியாமல் பாசமாய் நின்ற முறைமையொழிய, அருளாலே சிவத்தையும் அறிந்து பாசத்தையும் அறிந்து இந்தப்பாசத்தை நீங்கின தன்னையுங்கண்டு, எல்லாப்பொருளையும் தன்னகத்தே யுணர்ந்து பாசத்தை ஒழிந்ததுபோல, எல்லாவற்றையும் உணர்ந்தோம் என்னும் உணர்வையும் ஒழியவிட்டுத் தன்னுடைய போதஞ் சீவியாமற் பூரணனாய் நிற்கவே எல்லாவடிவுகளும் தன்னுடைய வடிவாய்த் தானே இந்த உலகங்கட்கெல்லாம் இறைவனாயுள்ள செம்பொருளோடு ஒட்டி நிற்பன் இவன் எ-று.

பலபேறுகளுள்ளேயும் தன்னைப் பெறுவதற்கு மேற்பட்ட பேறு ஒன்றுமில்லை. தன்னைப் பெற்றவன் ஆரென்னில் தன்னாலே எல்லாமாகிய திருவருளைத் தன்னிடத்திலே பெற்று முன்னே கொண்ட ஆன்மபோதத்தை விட்டுச் சிவபரம்பொருளோடு ஒன்றி நின்று எக்காலத்தும் எவ்விடத்தும் வியாபித்து நிற்பன். இப்படிப்பட்டவனே "தன்னைப் பெற்றவன்" என்பதாம்.தன்னலே-அருளாலே. கொண்டது - ஆன்மபோதம்.

இந்த நிலைமை ஆன்மாவுக்குள்ள தன்னியல்பென்பது,

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும். (268)

எனவரும் திருக்குறளாற் புலனாம்.

ஆன்மாவாகிய தனக்கு உயிராய் விளங்கும் முழுமுதற் பொருளை ஆன்மபோதம் நீங்கத் தனக்குரியதாகப் பெற்று எல்லா