பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


பரவசனாதலாவது, ஆன்மா தானே வினைமுதலாக ஐம்பொறிகளின் வழி ஒழுகுதல். தன் வசனாதலாவது, ஐம்பொறிகளை அடக்கி இறைவன் அருள்வழி அடங்கி ஒழுகுதல்.


'ஒருமையு ளாமைபோல் ஐந்தடக்க லாற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து’ (426)


‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்’ (121)

‘பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீ ரொழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்’ (6)


எனவரும் திருவள்ளுவப் பயன் இங்கு நினைக்கத்தக்கனவாகும்.

நின்வசனாதல் என்றது,

‘சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு’ (திருக். 422)

என்றாங்குப் பொறிவழிச் செல்லாது அறிவின்வழிப்பட்டு நன்னெறியின் ஒழுகுதல். ‘நின்னுடனாம்’ என்றது, ஆன்மபோதம் மேற்படாது சிவபோதமே மேற்பட்டு விளங்க உயிர்க்குயிராய் உடனாய் நிற்பன் என்பதாம். அங்ஙணம் நிற்றற்கு அருளே காரணம் என்பது புலப்படுத்துவார், “தான் நேரிழையாள் தன்வசனாயே யிருப்பன்” என்றார். “நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்துறையும் செலவு” என்பது திருமுருகாற்றுப்படை.


47. செத்தாரே கெட்டார் கரணங்கள் சேர்ந்ததனோ
டொத்தாரே யோகபர ரானவர்கள் - எத்தாலும்
ஆராத அக்கரணத் தார்ப்புண்டிங் கல்லாதார்
பேராமற் செல்வரதன் பின்.

இது, கருவி கரணங்கள் ஒருகாலமுங் கூடாதபடி அருளிலே யடங்கி நிற்கவல்லவர்கட்கே இந்தச் சிவயோகம் கைகூடும் என்று அருளிச் செய்கின்றது.

(இ-ள்) தற்போதம் இழந்தவர்களே சித்தவிகாரக் கலக்கமாகிய கரணங்களின் சேட்டை கெட்டவர்கள். தற்போத மிழந்த நிலையில் அம்மெய்ப் பொருளாகிய சிவத்தோடு ஒன்றி அதன்வழி ஒத்து அடங்கி யொழுகியவர்களே மேலான சிவயோக நிலை கைவரப் பெற்றவர்கள்