பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

85


சிவாநுபவம் நின்பால் உண்டாகும். அஃது உண்டாகவே அதன் பின்னர்ப் பாச ஞானம் பசுஞானம் ஆகிய குறையுணர்வின் பிணிப்பு உன்னிடத்திலே ஒருகாலத்தும் அணுகி முளைக்காது என்பதாம்.

இத்திருவுந்தியாரின் பொருளை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது, பின்வருந் திருக்களிற்றுப்படியாராகும்.


51. உள்ளும் புறம்பு நினைப்பொழியி லுன்னிடையே
வள்ளல் எழுந்தருளு மாதினொடுந்-தெள்ளி
யறிந்தொழிவா யன்றியே யன்புடையை யாயிற்
செறிந்தொழிவா யேதேனுஞ் செய்.

இஃது இறைவனை உள்ளும் புறம்பும் ஒருபடித்தாக வைத்து அன்பினால் வழிபடுதல் வேண்டும் என்று அறிவுறுத்துகின்றது.

(இ-ள்) உயிர்க்குயிராகிய இறைவனைத் தனக்குள்ளே காண வேண்டும் என்றும் புறம்பே காண வேண்டுமென்றும் நீ எண்ணிய நிலையில் உன்னுடைய ஆன்ம போதத்தையும் உடம்பினையும் நீ கைவிடாமையால் அப்பரம்பொருள் உனக்கு இரண்டுபட்டுத் தோன்றினதொழிந்து, அப்பொருளுக்குத் தனித்ததோ ரிடமில்லையாம் ஆதலால், உடல் உலகுகளையும் தத்துவங்களையும் அவற்றின் உருவம் தரிசனம் சுத்தி ஆகியவற்றாலே அருளின் மயமாகச் செய்து, ஒருநீர்மையான சிவஞானமேயாகி உனது நினைவு அற்றொழிய ஞானயோகத்திலே நிற்பாயானால் அப்பொழுதே கைம்மாறு கருதாது வேண்டுவார் வேண்டுவதே யீந்தருளும் வள்ளலாகிய சிவபெருமான் தனது அருளாகிய சத்தியுடன் வந்து தோன்றி உன்னை அகத்திட்டுக் கொண்டு தானேயாய் விளங்குவான். இதனைச் சிவயோகத்தின் கண்ணே நின்று தெளிய ஆராய்ந்து, சிவனை நுகர்கின்றோம் என்கின்ற அறிவாகிய தற்போதத்தைக் கைவிட்டு நிற்பாயாக, இந்த முறைமை எளிதிற் கூடாதாயின் சிவனுடைய பொருள்சேர் புகழ்த்திறங்களைக் கேட்டல் நினைத்தல் தெளிந்துகாணுதல் செய்தபொழுதே நினது உள்ளத்தை யுருக்குவதாகிய பேரன்பினைப் பெற்றாயானால் அதனாலே உன்னுடைய தற்போதமானது அழிந்து சிவனுடனே ஒருநீர்மையாய்ச் செறிந்து பிரிவற நிற்கும் பத்தியோகத்தினைப் பெறுவாய். இங்குச் சொல்லப்பட்ட ஞானயோகம் பத்தியோகம் என்னும் இரண்டினுள்ளே நினக்குப் பொருந்தியதொன்றைச் செய்வாயாக எ-று.

இனி, “இறைவன் உள்ளும்புறம்பும் எங்கும் தானாய் ஆழ்ந்தும் அகன்றும் விரிந்து நிற்றலால் உள்ளென்றும் புறமென்றும் இடத்