பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

சமயம் என்பது தத்துவம் என்ற உயிருக்கு உடல் போன்றது என்பர் விவேகானந்தர். சைவ சமயம், ஐரோப்பிய நாகரிகம் இந்தியத் துணைக் கண்டத்தில் பரவுவதற்கு முன்பே பெண்மையின் மேன்மையினை (Emancipation of Women) தனி மனித நிலையிலும் சமுதாய நிலையிலும் உயர்த்திப் பேசிய பெருமை கொண்டதாகும். சிவன் நிலைச் சக்தியென்றால் (Static Energy), பார்வதி இயங்கு சக்தியாகக் (Dynamic Energy) கருதப்பட்டிருக்கின்றார்,

இல்லறத்தை முழுமையும் விரும்பித் துறந்த மாணிக்க வாசகர் இறைவனை அடையும் எளிய வழிகளுள் ஆன்மீகக் காதல்தான் (Bridal Mysticism) சிறந்தது என்று உணர்ந்து பாவைப்பாடலை ஒரு வடிவமாகக் கொண்டு (Format) அதன் வழி இறையருட் கருத்துகளைப் படிப்படியாகத் திருவெம்பாவையில் உணர்த்துகின்றார்,

எந்த ஒரு செய்தியினையும் கல்வியறிவு மிகுதியாக இல்லாதவர்கூட அறிந்து கொள்ளும்படிச் செய்ய வேண்டும் என்றால் அவர்களுக்குப் பெரிதும் பழக்கப்பட்ட நிகழ்வுகளையும், நம்பிக்கைகளையும், கதைகளையும் பின்னணியாகக் கொண்டு இயம்பினால்தான் பயன் விளையும் என்பது செய்தித் தொடர்பு அறிவியல் (Communication Technology) கூறும் அறிவுரையாகும். மாணிக்கவாசகர் சிற்றூர்களிலுள்ள மகளிர்தம் விளையாட்டுகள், வழிபாடு, உட்கிடக்கை, சடங்குகள் ஆகியவற்றை இயற்கைச் சூழலிலேயே பயின்றவர். கண்களுக்கு எளிமையாகத் தெரியும் கண்ணாடிப் பாத்திரத்தில் உண்ணும் மருந்தை வைப்பதைப்போல எளிமையான பாவை நோன்பு என்ற சமுதாயச்