பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 7

இனி, திருவெம்பாவையின் முதற்பாடலை நோக்கு வோம். சத்தியை வியந்தது என்ற தலைப்பில் இப் பrடல்கள் அமைந்துள்ளன. திருவண்ணாமலையில் மாணிக்கவாசகப் பெருமான் தங்கியிருந்த காலையில் இத் திருவெம்பாவைப் பாடல்களைப் பாடியருளினார் என்று கூறுவர். மார்கழித் திங்களில், விடியற்காலையில் கண் விழித்தெழுந்து குளம், ஆறு முதலான நீர்நிலைகளுக்குக் குளிக்கச் செல்லும் பெண்டிர் இன்னும் உறங்கிக் கொண் டிருக்கும் தம்மொத்த தோழியரை அழைக்கு முகமாக அவர்களோடு உரையாடும் போக்கில் இப்பாடல்கள் இயற்றப் பெற்றுள்ளன. மனோன்மணி, சர்வபூததமணி, பலப்பிரம தனி, பல விகரணி, கலவிகரணி, காளி, ரெளத்திரி, சேட்டை, வாயை என்னும் ஒன்பது சக்தி களுள், முன்னின்றவர் பின்னின்ற வரைத் துயிலெழுப்பு வதாகவும், எல்லாருங்கூடி எம்பெருமானை வந்தித்து வாழ்த்தும் பொருட்டுத் தம்முட் பாடுவதாகவும், இவ் வாறாக இயம்பிய பாடல்களின் தொகுதியே திருவெம் பாவை என்றும் தத்துவ நோக்கில் தலைப்படுவோர் கருத்துரைப்பர். --

சிவபெருமான் பிறப்பிறப்பிலி; அதாவது பிறப்பும் இறப்பும் அற்றவன். தோற்றமும் ஒடுக்கமும் அப்பெரு மானுக்கில்லை. எனவே மணிவாசகப் பெருந்தகையார் தொடக்கத்திலேயே அப்பரம்பொருளை ‘ஆ தி யு ம் அந்தமும் இல்லா எனத் தொடங்கி விளிக்கிறார். அவ்’ ஆண்டவன் அரும்பெருஞ்சோதி யாகத் திகழ்கின்றான். எல்லா விளக்கும் விளக்காகா என்பது போல, எல்லாச் சோதியும் பெருஞ்சோதியாக, அதிலும் அரும்பெருஞ் சோதியாகிவிட முடியுமா? சிறு அகல் விளக்கு முதல் நாம் கண்ணாற் காணுகின்ற உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு - அதாவது சூரியன் வரை யிலும் உலகிற்கு ஒளி வழங்கும் எல்லாச் சோதிகளும் ஒரு காலைக் கொருகால் குன்றும் நீர்மையுடையனவாகும்.