பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3% துப் பருகுமாறு செருகுகின்றது. இந்த யானை மூங்கில் குருத்தினை விரும்பவில்லை. ரஸ்குல்லா போல் தேனடை யை மட்டிலும் அளிக்க விரும்பினது போலும், இன்னுெரு யானையின் செயலைப் பொய்கையாழ் வார் நமக்குக் காட்டுவர். திருமலையின் கொல்லைகளில் இராக்காலத்தில் யானையொன்று பட்டி மேய்கின்றது. ஒரு கையில் கொளுத்திய தீவட்டியும் மற்ருெரு கையில் அம்பு தொடுத்த வில்லையும் கொண்டு அந்த யானையை அதட்டிச் செல்லுகின்றனர் குறவர்கள். இதல்ை யானே வெருவி ஓடுகின்றது. ஆயின், எதிர்பாராத விதமாக அஃது ஒடும் வழியில் விண்ணினின்றும் எரி மீன் ஒன்று விழுகின்றது. யானே அதனை நட்சத்திரம் என்று ஒராது குறவர்கள் தம் கைத்தீவட்டியையே கீழெறிந்தனர் என்று கருதித் திகைத்துக் கற்சிலைபோல் நின்று விடுகின்றது. 'பெருவில் பகழிக் குறவர்கைச் செந்தீ வெருவிப் புனந்துறந்த வேழம்-இருவிசும்பில் மீன்வீழக் கண்டுஅஞ்சும் வேங்கடமே மேலசுரர் கோன்வீழக் கண்டுகந்தான் குன்று." |பகழி - அம்பு; வெகுவி-அஞ்சி; புனம்-சொல்லை; வேழம் யானை, விசும்பு-ஆகாயம்; மீன்-நட்சத்திரம்; அசுரர் கோன்-இரணியன்; உகந்தான்.மகிழ்ந்தான்.) என்பது பொய்கையாழ்வார் காட்டும் சொல்லோவியம் ஆகும். பேயாழ்வார் காட்டும் யானையோ, ஆதிமூலமே!’ என்று ஒலமிட்டழைத்த கஜேந்திரன் மரபுவழி வந்தது. போலும். இது புரியும் வழிபாட்டுச் செயலை ஒரு சமத் காரம் பொலியப் பேசுகின்ருர் ஆழ்வார். வழிபாட்டுக் 60. முதல் திருவந்-40,