பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92


92 யாது வருந்தும் மாதவர்க்கு அவர் செல்லவேண்டிய அருநெறிகளைக் காட்டுகின்றன. 'இடுகு கண்ணினர் இடருறு மூப்பினர் ஏக கெடுகு கூனல்வால் நீட்டின உருகுறு நெஞ்சக் . கடுவன் மாதவர்க்(கு) அருநெறி காட்டுப காணுய்." இடுகு-இடுகிய; இடர். துன்பம்; ஏக - செல்ல. நெடுகு கூனல்-மிக்க கூனையுடைய, மாதவர்.தவசிகள்.) என்பது கம்பன் காட்டும் சொல்லோவியம். இங்கு இராமன் சீதைக்குப் பல சித்திரகூடமலைக் காட்சிகளைக் காட்டுகிருன். இன்னும், சில மந்திகள் சிலம்பியின் நூல்; பஞ்சின் நூல்களே ஆராய்ந்து தெரிந்து அந்தணர்க்கு அளிக்கின்றன." கடுவன்கள் முனிவர்கட்கு மாங்கனிகளை அளிக்கின்றன. இங்கனம் குறிஞ்சிநிலக் காட்சிகள் வழி வழியாகப் புதியபுதிய கற்பனைப் போக்குகளுடன் இலக் கியங்களில் புலவர்களால் காட்டபெற்று அறிவுக்கு விருந்தாக அமைகின்றன. தத்துவ ஞானியர் இந்த அசித்துக் காட்சிகளிலும் ஆழங்கால் படுகின்றனர். பேயாழ்வாரும் ஒரு குரங்கின் செயலைக் காட்டி மகிழ் கின்ருர் தெளிவான கற்பாறையின் மீது உட்கார்ந்து கொண்டிருக்கிறது பெண் குரங்கொன்று. அது தனக்கு நட்பாகவுள்ள ஓர் ஆண்குரங்கை ே நாக்கி விண்ணில் வெண்மையாகத் தோன்றும் திங்களைப் பிடித்துத் தருமாறு வேண்டுகின்றது. 55. அயோ-சித்திர-30. 66. அயோ. சித்திர-32. 67 அயோ. சித் திர -33,