பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96


96 செஞ்சுடர் நாவளைக் கும்திரு மாலிருஞ் சோலையதே." என்ற பெரியாழ்வார் பாசுரத்தாலும் இவ்விருப்பத்தை அறியலாம். குலசேகரப் பெருமாள் : சேரர்கோன் குலசேகராழ்வாருக்குத் திருவேங்கட மலையின்மீது ஏற்பட்ட கழிபெருங்காதல் அற்புதமானது. ஒர் இனிய திருமொழியில் அந்த ஆழ்வாரின் எண்ணக் கோவைகளைக் கண்டு களிக்கலாம். திருவேங் கடத்தில் பிறத்தலும் அங்கு ஏதாவது ஒரு பொருளாக இருத்தலும் போதும் எனக் கூறுகின்ருர் ஆழ்வார் திரு வேங்கடமலையில் வாழும் பேறு கிடைக்கப் பெற்ருல், அறிவற்ற விலங்குப்பிறவியும் தனக்குப் போதும் என் கின்ருர். வேங்கடத்து, கோனேரி வாழுங் குருகாய்ப் பிறப்பேனே' என்பது அவர் திருவாக்கு. இப்படிக் கூறியவரின் சிந்தனை சிறகடித்துப் பறக்கின்றது. குருகுக்கு இறகுகள் இருப்பதை நினைக்கின்ருர். அதனல் அஃது அவற்றின் துணைகொண்டு திருமலையை விட்டு வேறிடத்திற்குச் சென்ருலும் செல்லக் கூடும் என்று கருதுகின்ருர். அங்ங்னமின்றி அந்த மலையிலேயே பிறத்தல், வாழ்தல், இறத்தல் ஆகிய செயல்களையுடைய மீளுய்ப் பிறந்தாலும் போதுமே என்று எண்ணுகின்ருர், 'தேனுர் பூஞ்சோலேத் திருவேங் கடச்சுனையில் - மீளுய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே' என்பதளுல் தன் அவாவின வெளியிடுகிரு.ர். எம் பெருமானுக்கு அந்தரங்கச் சேவகைத் தொண்டு 76. பெரியாழ்.திரு.4.3:2. 77. பெரு.திரு. 4:1 78, பெரு.திரு.4:2.