பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97


97 புரியும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்ருல் தான் யாதொரு தடையுமின்றி அர்ச்சக பரிசாரர்களுடன் எளிதில் திருக் கோயிலில் புக்குக் கருவறையை அடைந்து எம்பெருமான் அருகில் நின்று பணி செய்யலாம் என்ற எண்ணம் பளிச் சென்று இவர் மனத்தில் உதிக்கின்றது. 'மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தான்உமிழும் பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவேன் ஆவேனே.”. என்று தன் விருப்பத்தைத் தெரிவிக்கின்ருர். தான் விரும்பும் அந்தரங்கப் பணி கிடைத்தால் பொன் வட்டில்மேல் மனம் சென்று அதனைக் களவாடும் ஆசை தோன்றலாம்; அதனல் சிறைவாசமும் கிட்ட லாம் என்ற எண்ண ஓட்டம் எழுகின்றது ஆழ்வாருக்கு. ஆதலால் இயங்குதிணைப் பிறப்பு வேண்டும் என்ப தில்லை; நிலைத்திணைப் பிறப்பு கிடைத்தாலும் போதும் என்று எண்ணுகின்றது இவர் மனம், வானவர், வானவர் கோனுடன் பூமாரி பொழியும் இடமாதலால் அத் திருமலையில் மலர்ப்பணியாற்றும் மரமாகவேனும் இருக்க லாமே என்று கருதுகின்ருர். தேனின் இனிய பிரானே செண்பகப் பூச்சூட்ட வாராய்' என்ற பெரியாழ்வார் வாக்கால் எம் பெருமான் திருவுள்ளத்திற்குச் சண்பக மலர் மிகவும் உகப்பாதலை அறிகின்ருர். உடனே, "பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துச் செண்பகமாய் கிற்கும் திருவுடையேன் ஆவேனே'. என்று தன் ஆசையை வெளியிடுகின்ருர். 79. பெரு.திரு.4:3 80. பெரியாழ்.திரு-21:1. 81. பெரு. திரு. 4:4, லே.-7