பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99


99 ஏற்றதன்று என எண்ணுகின்றர் ஆழ்வார். ஆதலின் எவராலும் பெயர்த்துக் கொண்டு போக முடியாத காருைக வேனும் பிறக்க கூடாதா எ ன் று எண்ணுகின்றது இவரது மனம். 'திருவேங்கட மலைமேல் காருைய்ப் பாயும் கருத்துடையேன் ஆவேனே' என்று அபேட்சிக்கின்ருர் ஆழ்வார். இதனைச் சிறிது சிந்தித்ததும் அதிலும் ஒரு குறையிருப்பதை உணர்கின்ருர் ஆற்றில் எப்பொழுதும் நீரோட்டம் இருக்காதன்முே? அப்போது திருமலையிலும் வாழ்க்கை இழந்ததாக அன்ருே முடியும்? அங்ங்ணமின்றி எப்பொழுதும் ஒரு தன்மையாகத் திரு வேங்கடமுடையானச் சேவிக்க வரும் அடியார்களின் அடிப்பொடி படும்படி வழியாய்க் கிடக்கும் நிலேமை தனக்கு வாய்த்தால் நன்முக இருக்குமே என்று நினைக் கின்றது இவரது தூய்மையான உள்ளம். உடனே, 'வெறியார் தண்சோலைத் திருவேங் கடமலைமேல் நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே ளுவேனே.” (வெறிஆர்-மணம் மிக்க; நெறி-வழி) என்று தன் அவாவினைப் புலப்படுத்துகின்ருர் ஆழ்வா இதனைச் சிறிது ஆராய்ந்தவுடன் இதிலும் ஒரு குறை தட்டுப்படுகின்றது. வழியென்பது அவரவர் வசதிக்குத் தக்கபடி மாறுபடுவதன்ருே? ஒரிடத்திற்கு ஒன்றுதான் வழி என்றும் சொல்ல முடியாது. அன்றியும் அது விலகி நிற்கும் பான்மையது. இப்போதுள்ளது போல் பேருந்து வசதிகள் இருப்பினும் எல்லோரும் நடந்துதான் வருவர் என்று சொல்ல முடியுமா? இவற்றையெல்லாம் எண்ணிய ஆழ்வார் நெறியாக அமைய வேண்டும் என்று விரும்புவதைவிட எ ம் பெ ரு மா ன து. திருவருள் 84. பெரு. திரு. 4:1. T བ་བཅས་པར་ར་བར་ག་བ་ བར་ དཔལ་འབབ་ དཔལ་ཕག་ལ- ཕ་ས་ན་མ་བ་ 85. பெரு திரு. 4:8