பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100


ió0 நோக்கம் பதியுமாறு அவன் கண்வட்டத்தில் மெய்யடி யாரும் பிறரும் வேறுபாடின்றி எல்லோரும் இடை விடாது நடமாடும்படியான ஓர் அசேதன பொருளாகி விடில் அவனுடைய திருப்பவளத்தை விடாது காணும் பேறு கிட்டுமே என்று எண்ணுகின்ருர். "நெடியானே வேங்கடவா கின்கோயி லின்வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துஉன் பவளவாய் காண்பேனே.”* என்று சிறப்பான விருப்பத்தையும் வெளியிடுகின்ருர், இப் பாசுரத்தை அடியொற்றியே திருமால் திருக்கோயி லின் கருவறையின் வாயிற்படி 'குலசேகரன்படி” என்று இவர் பெயரையிட்டு வழங்கும் சம்பிரதாயமும் இருந்து வருகின்றது என்பதனை ஈண்டு நினைவுபடுத்த விரும்பு கின்றேன். இந்தப் பேற்றுக்கும் குந்தகம் விளையினும் விளைய லாம் என்று எண்ணுகிருர் ஆழ்வார். திருமலைக்கு வரும் பக்தர்களுள் செல்வந்தராக இருக்கும் எவரேனும் ஒருவர் சந்நிதிக்குள் கருங்கல் படியிருப்பது திருவேங்கடமுடை யானது செல்வநிலைக்குத் தகாது என்றும், தங்கவாச லுக்கு உட்புறமுள்ள வாயில் கருங்கல்லாக இருப்பது சிறிதும் அடாது என்றும் கருதித் தங்கத்தகட்டால் மூடு வதற்கும் முன்வரலாமன்ருே? அப்படிச் செய்தால் திருவேங்கட அப்பனின் திருமுக மண்டல சேவையை இழக்க நேரிடுமே. ஆகையால் படியாய்க் கிடப்பதும் பாங்கன்று என்று அறுதியிடுகின்ருர். பின்னர் எந்தப் பிறவியை வேண்டுவது என்பது தோன்றவில்லை. அவன் தாள் வணங்க அவன் அருளின்றி முடியுமா? முடியா தன்ருே? இந்த ஞானம் தம் உள்ளத்தில் தோன்றவே த 86. பெரு. திரு.49