பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102


10? பேதைநெஞ்சம் தென்றல் பிரமரம்ஈ ரைந்துமே தூதுரைத்து வாங்கும் தொடை." |எகினம் - அன்னம்; பிரமரம்-வண்டு | என்ற இரத்தினச் சுருக்கப் பாடலால் தூதுவிடுவதற் குரிய பொருள்கள் இன்னவை என்பது அறியப்படும். இவற்றுள் மேகமும் ஒன்ருகும். இவையெல்லாம், 'சொல்லுரு போலவும் கேட்கு போலவும் சொல்லியாங் கமையும் என்மஞர் புலவர்' என்ற நூற்பாவின் பகுதியால், பேசுவன போலவும் கேட்பன போலவும் அமைத்துக் கோடல் கவிதை மரபாக இருந்து வருகின்றது. 'கற்பூரம் நாறுமோ” என்று திருச்சங்காழ்வாைேடு சொல்லாடிப் பொழுதுபோக்கின ஆண்டாள் அம்மை யாருக்கு அது மறுமாற்றம் உரைக்கவில்லை. பிரிவால் தன் ஆற்றமை மீதுார்ந்து செல்லத் தொடங்குகிறது. காலமும் கார்காலமாக இருக்கின்றது. மேகங்களும் 'ஆழியுட் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி ஊழி முதல்வன் போல் மெய்கறுத்து, பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில், ஆழிபோல மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து வந்து தோன்றுகின்றது. கார்காலத்தில் தவருது திரும்புவதாகக் கூறிப்போன எம்பெருமானின் திருவாக்கு அவள் நினைவிற்கு வருகின்றது. அப்படியே அவனும் மேகங்களுடன் வந்திருக்கக்கூடுமென்று நினைக் கின்ருள். மேகங்காள், எம்பெருமானும் உம்முடன் வந்தானே? என வினவுகின்ருள். அவை மறுமொழி தரவில்லை ; அந்த எம்பெருமானும் அவள் கண்ணுக்குத் 89. தொல். பொருள்.செய்யு-192. 90. நாச்-திரு-7