பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103


f63 தென்படவில்லை. ஆகவே, தன்னுடைய நிலைமையை எம்பெருமானுக்கு அறிவிக்க வேண்டுமென்று மேகங்களை இரக்கின்ருள். இந்தத் திருமொழி முழுவதும் மேகத் தைத் துதுவிடுவதாகச் செல்லுகின்றது. மேகங்களே நோக்கி, 'கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்வேனே பெண்ணிர்மை பீடழிக்கும் இது தமக்கோர் பெருமையே.' |குண்டு-நுனி, துளிசோர-அரும்ப; சோர்வேனவருந்துகின்ற என்னை ஈடு அழிக்குமிது - உருவழிக்கிற இது; தமக்கு-அவருக்கு.) என்று வினவுகின்ருள். 'திருவேங்கடமுடையானப் பெரியாழ்வார் திருமகள் ஆசைப்பட்டுப் பெருதொழிந் தாள் என்ருல் அவனுடைய பெருமை என்னுகும்?" என்று கேட்கின்ருள். - அடுத்து, மேகங்களை நோக்கி இவ்வாறு பேசு கின்ருள்: “மாமுகில்காள், காமத்தி என்னுள்ளே புகுந்து என்னை வாட்டுகின்றது. நள்ளிரவில் ஒரு தென்றற்காற் றுக்கு நான் இலக்காகி எவ்வாறு இருப்பேன்? தென்றல் காமத்தீயிற்குத் துணையாயிருந்து நோயை அதிகப் படுத்துகிறதே. எம்பெருமானப் பிரிந்து பட்ட துக்கத் தினுல் என் மேனியழகு கெட்டது. உடல் இளேத்த மையால், வளையல்கள் கழன்ருெழிந்தன. நானும் நெஞ்சு தளர்ந்து உறக்கமொழிந்து கிடக்கின்றேன். இந்த நிலையில் எம்பெருமானின் திருக்குணங்களை எங்ங்னம் போற்றி உயிர்காத்திருக்க முடியும்? 91. நாச். திரு-8:1 92. நாச். திரு-8:2,