பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104


Hö4 எளியாரை எல்லாரும் கைவிடுவது உலக இயல்பே யன்ாே?" இங்ங்னம் தன் நிலையை மேகங்கட்கு உணர்த்திச் சில செய்திகளை வேங்கடத்து எம்பெருமான் மாட்டுச் சொல்ல வேண்டுகின்ருள். முதல் செய்தி : ஆண்டாள் தெரிவிக்க விரும்பும் முதற்செய்தி இது. “என் மார்பிலுள்ள இளமுலைகளை அவ்வெம்பெருமான் விரும்பி அணைந்து கொண்டே இடைவிடாது கிடக்க வேண்டுமென்று நான் ஆசைப்பட்டுக் கிடக்கின்றேன்.” என்பதாக. 'என்னுகத் திடங்கொங்கை விரும்பித்தாம் நாடோறும் பொன்னுகம் புல்குதற்கு என்புரிவுடைமை செப்புமினே." (ஆகம்-மார்பு; தாம்-எம்பெருமான்; பொன் ஆகம்விரும்பத்தக்க மார்பு; புல்குதல் - அணைதல்; புரி வுடைமை-ஆசையுடைமை.) என்பது பிராட்டியாரின் திருவாக்கு. " ஒரு பொருளிலே விருப்பமுள்ள சிருர்களைப் பெற்றேர் எவ்வளவு ச மா தா னப்படுத்திலுைம் அவர்கள் சமாதானம் அடைவதில்லை. விரும்பின பொருளைப் பெறும் வரையிலும் விடாத பிடிவாதங் கொள்வது போல் என் இளங்கொங்கைகளும் அவ் வெம்பெரு மானுடைய திருமார்புடன் அணையவேண்டும் என்று பிடிவாதம் செய்கின்றன” என்கின்ருள். சொற் கேளாத ப்ரஜைகளைப் போலே யாய்த்து முலைகளின்


93. நாச். திரு.8:3.

94. நாச்-திரு. #4