பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105


i05 படி' என்ற இன்சுவை மிக்க வியாக்கியான வாக்கியம் சுவைத்து மகிழத்தக்கது. இரண்டாவது செய்தி : ‘எம்பெருமான் என்னிடத்துப் பறித்துப்போன கைவளையல்களைத் திருப்பிக் கொடுப்பதாக இருந்தால் என் நிலையை அவருக்குத் தெரிவியுங்கள் ” என்பது இரண்டாவது செய்தி. ' தான் கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே'-என்பதால் அவனுடைய மன ஈடுபாட்டை அறிந்து கொண்டு தன் நிலையைத் தெரிவிக்குமாறு வேண்டுகை என்ற குறிப்பும் புலனு கின்றது. அவன் தரிலும் தருகிருன், தவிரிலும் தவிரு கிருன் ; நீங்கள் அறிவித்துப் போருங்கோள்” என்ற வியாக்கியான வாக்கியமும் கண்டு மகிழத்தக்கது. மூன்ருவது செய்தி : தன்னுடைய நிறைவுகளைக் கொண்ட நாரணற்கு தன் நடலை நோயைத் தெரிவிக்க வேண்டுமென்பது மூன்றுவது செய் தியாகும். இச் செய்தி தாங்கிய பாசுரத்தில் ஆழங்கால் படுவோம். சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள்! மாவலியை நிலங்கொண்டான் வேங்கடத்தே கிரந்தேறிப் பொழிவீர்காள்! உலங்குண்ட விளங்கனிபோல் உள்மெலியப் புகுந்தென்னை நலங்கொண்ட காரணற்குஎன் நடலைநோய் செப்புமினே." 95. ப்ரஜைகள் . பிள்ளைகள். 96. நாச்-திரு. 8:6