பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108


HÚ8 குறிப்பு அறிந்து மகிழத்தக்கது. “ஒரு நாள் தங்குமேல் என்னுவி தங்கும். குனஜ்ஞானத்தாலே தரியாளோ என்றிருக்கவொண்ணுது; அணையுமாகில் தரிக்கலாம்” என்ற வியாக்கியானம் கண்டு மகிழத்தக்கது. இறுதியாகத் தன் நிலைமையை மீண்டும் ஒருமுறை புலப்படுத்தி உள்ளத்தைத் தொடுமாறு கூறும் செய்தி நம் உள்ளத்தையும் நெகிழச் செய்கின்றது. 'இராம நாமங்களைச் சொல்லி மழைக்காலத்தில் எருக்கம் பழுப்புகள் அற்று விழுவது போல் ஒசிந்து கிடக்கின் றேன். இந்நிலையில் கிடந்து தவிக்கும் எனக்கு நெடுகிச் செல்லுகின்ற காலத்தில் ஒரு நாளாகிலும் ஒரு வாய்ச் சொல் அருளமாட்டாரோ?' என்று தான் ஏங்கி நிற்கும் நிலையைப் புலப்படுத்துகின்ருள். அதன்பின்னர் அவள் பேசும் பேச்சுதான் நம் உள்ளத்தில் ஆழப்பதி கின்றது. இஃது எம்பெருமான் திருவுள்ளத்தைக் கட் டாயம் தொடத்தான் செய்யும். அம்மையார் மேகத்தை விளித்துப் பேசுகின்றர். 'மதயானை போல்எழுந்த மாமுகில்காள்! வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்! பாம்பணையான் வார்த்தையென்னே! கதியென்றுக் தாளுவான் கருதாதோர் பெண்கொடியை வதைசெய்தான் என்னும்சொல் வையகத்தார் மதியாரே..!" (பதி - இருப்பிடம்; தான் - எம்பெருமான்; வதைகொலை; மதியார் - மதிக்க மாட்டார்கள்.) 100. நாச்.திரு-8:8 101. நாச். திரு. 8:9