பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109


109 பாசுரத்தின் பொருள் தெளிவு. எனினும், சொற் ருெடர்கள் குறிக்கும் தொனிப் பொருளில் ஆழங்கால் படுவோம். வந்தேறிகள் போலன்றி எம்பெருமான் திவ்விய தேசத்தில் நிரந்தரமான வாழ்வு பெற்றிருப்ப தால் செருக்கியிருக்கும் நிலைகண்டு மதயானை போல் எழுந்த மாமுகில்காள்' என விளிக்கின்ருள். பாம்பணை யான் வார்த்தை என்னே!'- என்பதில் திருவனந்தாழ் வானிடம், 'சென்ருல் குடையாம்; இருந்தால்சிங் காசனமாம் கின்ருல் மரவடியாம்; நீள்கடலுள்-என்றும் புணையாம்; மணிவிளக்காம்; பூம்பட்டாம் புல்கும் அணையாம்' - (சென்ருல் - உலாவில்ை; இருந்தால் - உட்கார்ந் தால், மரவடி -பாதுகை, புணே - மெத்தை (தெப்பம்); விளக்கு - தீபம், பூம்பட்டு - திருப்பரிவட்டம்; புல்கும்தழுவும்; அணே - தலையணை.) . . . . என்று பொய்கையாழ்வார் அருளிச்செய்தபடி எல்லாவித கைங்கரியங்களையும் கொள்வதுபோல் என் னிடத்தும் கொள்வன் என்றிருந்தேன்; பாம்ட்ணையைக் கைவிட்டுத் திருமதுரையில் வந்து பிறந்த கண்ண பிரான் தேர்த்தட்டில் நின்று சொன்ன வார்த்தையை (சரமசுலோகத்தை)" மெய்யென்று நம்பி மோசம் போனேன். பாம்போடே அணைந்து பாம்பின் தன் மையே தனக்கும் உண்டாகப் பெற்ருன். அதற்கு நாக்கு இரண்டாக இருப்பதுபோல் இவனும் இரண்டு நாக்குப் பெற்ருன்; பொய்யனுகி விட்டான்' என்ற கருத்து தொனித்து நிற்பதைக் கண்டு மகிழ்கின்ருேம். தன் 102. முதல் திருவந். 53. 103. பகவத் கீதை-18 : 66,