பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116


116 பட்டி மேயாமல் எம்பெருமான் பக்கல் சென்று சேர்ந் ததே என்று உவந்து தன் நெஞ்சினைக் கொண்டாடு கின்ருர் அடுத்த திருமொழியில். " இங்ங்னம் நெஞ் சினைப் போற்றும் பண்பு ஆழ்வார் பெருமக்களின் பொது வான பண்பாக இருப்பதை அவர்கள் அருளிச் செயல் களில் கண்டு மகிழலாம். திறம்பாது என் நெஞ்சமே! செங்கண்மால் கண்டாய்” என்று பேசுகின்ருர் பொய் கையாழ்வார்." - 'உளன்கண்டாய் கல்நெஞ்சே உத்தமன் என்றும் உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன்கண்டாய்" என்று நெஞ்சை வாழ்த்துகின்ருர் திருமழிசையாழ்வார். நம்மாழ்வாரும் திருவாய்மொழியில், 'நெஞ்சமே கல்லை! நல்லை. உன்னைப் பெற்ருல் என்செய்யோம்? இனி என்ன குறையினம்?' என்றும், "ஊனில்வாழ் உயிரே! நல்லையோ! உன்னைப்பெற்று வானுளார் பெருமான் மதுசூதன் என்.அம்மான் தானும்யாதும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம் தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே.' என்றும் அடிக்கடி நெஞ்சைக் கொண்டாடுதல் காண லாம். அங்ங்னமே திருமங்கையாழ்வாரும், மேலே குறிப் பிட்ட பெரிய திருமொழியில்' ஒவ்வொரு பாசுரத்தி லும் தம்முடைய திருவுள்ளத்தை விளித்து வேங்கடத்து

39. பெரி. திரு. 2:1. 140. முதல். திருவந், 96, 141. நான்முகன். திருவந். 86. 142. திருவாய். 1-10:4 143. திருவாய். 2-3:1 144. பெரி, திரு. 2.1.