பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122


122 இறை - கணநேரம்; நிகர்.ஒப்பு; புகல் ஒன்று. வேறு வழி.! இந்தப் பாசுரம் வைணவர்கட்கு 'சரம சுலோகம் போல்' இனிப்பது; அது போல் ஆன்மாவை ஈடேற்றும் புணைபோல் இருப்பது. இதுதான் எம்பெருமானைக் கால்கை பிடித்து (காக்கைபிடித்து?) உய்யும் வழியாக இருப்பது. வைணவ தத்துவத்தில் கூறினுல் சரணுகதியாக இருப்பது. இப்பாசுரத்திற்கும் இப்பாசுரம் அடங்கிய பதிகத்திற்கும் ஈட்டாசிரியர்கூறும் சொற் பொருள்கள் சிந்தைக்கும் செவிக்கும் இனிப் பவையாகும். இத் திருவாய் மொழியின் ஒன்பதாம் பாசுரத்தின் இறுதியடி 'அந்தோ அடியேன் உன் பாதம் அகல கில்லேன் இறையுமே' என்பது. ஆழ்வார் பாசுரங்கட்கு உரை சொல்லும் போதே வைணவதத் துவம் அனைத்தையும் குழைத்துத் தந்துவிடுவார்கள்அன்னை பிள்ளைக்கு முலைப்பாலுடன் மருந்தைக் குழைத்துத் தருவது போல. அன்னை உடலுக்கு மருந்து ஊட்டுகின்ருள், ஆசாரியர்கள் உயிருக்கு மருந்து ஊட்டுகின்றனர். அவ்வளவுதான். இப்பாசுரம் சரணு கதியைக் குறிப்பதால் இத்திருவாய்மொழி முழுவதும் சரணுகதி சாரமாயிருக்கும் என்று வைணவ ஆசாரியர்கள் திருவுள்ளம் பற்றுவர்கள். அதற்கேற்ப இந்த ஆரும் பத்து முழுவதிலும் உலகளந்த திருவடி அடிக்கடி கூறப் பெறுவதையும் காணலாம். நெடியோன் என்ற பெயர் திரிவிக்கிரமனைக் குறிப்பது. மூன்று ஆச்சரிய மான செயல்களைச் செய்தவன் திரிவிக்கிரமன். 'திரிவிக் கிரமனச் சிலர் திருவிக்கிரமன்' என்று எழுதுவர். அது தவறு என்பது ஈண்டு அறியத் தக்கது. இத்திருப் 158. கீதை 18:66 SS S SSAS SSAS 159, திருவாய். 6-10,9,