பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123


#23 பாசுரத்தை துவயமந்திரத்தின் பதங்களோடு ஒப்பிட்டுப் பொருள் கூறுவர் ஈட்டாசிரியர். அவ்வுரை நோக்கி அறிந்து மகிழ வேண்டுகிறேன். அகப்பொருள் கலப்பு : இனி ஆழ்வார் பெருமக்கள் தம்முடைய பாசுரங் களில் அகப்பொருள் தத்துவத்தைக் குழைத்துக் காட்டும் அருமைப் பாட்டையும் ஈண்டுக் குறிப்பிடுதல் மிகவும் பொருத்தமாக அமையும். பரம்பொருளுக்கும் ஆன்மாவிற்கும் ஒன்பது வகையான தொடர்புகள் ஏற்பட்டுள்ளன என்று வைணவ தத்துவம் கூறுகின்றது. அவற்றுள் நாயக-நாயகி பாவனையும் (தலைவன்தலைவி உறவு) ஒன்ருகும். இந்த உறவே ஏனைய வற்றுள் சிறந்தது ; உயிராயது. இந்த முறையில் பாமான்மாவைத் தலைவனுகவும், சீவான்மாவைத் தலைவியாகவும் வைத்து விளக்கும் பாடல்களை நாலா யிரத்திலும் தேவாரத்திலும் காணலாம். ஆயினும், வைணவப் பெருமக்களே சங்ககால நெறியை யொட்டி ஒர் அகப்பொருள் நெறியினை அமைத்துக் காட்டிய பெருமையினைப் பெற்றனர். புருடோத்தமனுகிய எம்பெருமானது பேராண்மைக்கு முன்னர், உலகிலுள்ள ஆன்மாக்கள் யாவும் பெண் தன்மையினை அடைந்து நிற்கும் என்பது அவர்கள் கண்ட தத்துவமாகும். எனவே, ஆழ்வார்கள், குறிப்பாக நம்மாழ்வாரும் திரு மங்கையாழ்வாரும், பெண் தன்மை எய்திப் பல திருக் கோயில் மூர்த்திகளை அநுபவித்ததை அவர்களுடைய திருப்பாசுரங்களில் காணலாம். - அன்பர்களே, இவ்விடத்தில் வைணவர்களிடையே நிலவும் ஒரு மரபினை நினைவூட்டுகின்றேன். தண்ட காருண்ய முனிவர்கள் இராமபிரானது பேரழகில்