பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127


127 பெற்றது. இந்த மந்திரத்தின் தன்மையை அறிந்தவ ருக்கே ஏனைய துவயம், சரமசுலோகம் என்ற இருமந்தி ரங்களிலும் சொல்லப்பெறும் உபாயத்திலும் பலத்திலும் (பலனிலும்) விருப்பம் ஏற்படும். இந்த மூன்று மந்திரங் களும் ஒன்றையொன்றை விரித்துரைக்கும் முறையில் அமைந்துள்ளன. முதலில் உள்ள திருமந்திரத்தில் 'ஓம்' 'நம', 'நாராயணுய' என்ற மூன்று சொற்கள் அடங்கி யுள்ளன. இவற்றுள் ஒம் என்ற சொலின் பொருளையே ஏனைய இரண்டு சொற்களும் நன்கு விரிவுபடுத்துகின்றன. இந்த இரண்டு சொற்களின் பொருளையே துவயம்’ என்ற இரண்டாவது மந்திரம் விரிக்கின்றது. இத்தத்துவத் தின் பொருளையே சரமசுலோகம் என்ற மூன்ருவது மந்திரம் மேலும் விரிக்கின்றது. திருமந்திரத்திலுள்ள மூன்று சொற்களிலும் ஓம்’ என்ற பிரணவம் ஆன்மாவி னுடைய அடிமைத் தன்மையையும் (சேஷத்துவத் தையும்) நமஸ்ஸா ஒருவனையே பிரதானமாகக்கொண். டிருக்கும் தன்மையையும் (பாரதந்திரியத்தையும்), 'நாராயணுய என்பது ஆன்மா இறைவனுக்குப் புரிய வேண்டிய அடிமைத் தொழிலையும் (கைங்கரியம்) உணர்த்துகின்றன. மேலும், இவற்றுள் பிரணவம் பிரிந்திருக்கும் நிலையில் 'அ', 'உ', 'ம' என்ற மூன்று எழுத்துக்களைக் கொண்டது. இம் மூன்று எழுத்துகளும் முறையே இருக்கு, யஜுர், சாமம் என்ற மூன்று வேதங்களின் உயிர் நிலையான எழுத்துக்களாகும். ஆகவே, பிரணவம் சகல வேத சாரமாகின்றது. இந்த மூன்று எழுத்துகளும் மூன்று சொற்களாக நின்று மேற்கூறிய மூன்று பொருள் களையும் தெரிவிக்கும். அஃதாவது,அகாரம் பகவானையும், அதில் ஏறி மறைந்துள்ள வேற்றுமை அடிமைத்தன்மை யையும் (சேஷத்துவம்), உகாரம் அந்த அடிமைத்