பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128


128 தன்மை மற்றவருக்கில்லாமல் எம்பெருமானுக்கே உரிய தாயிருக்கும் தன்மையையும் (அநந்யார்ஹத்துவம்), மகாரம் ஞானவானகிய சீவான்மாவையும் தெரிவிக் கின்றன. இங்ங்னம் ஆன்மாக்கள் யாவும் பூரீமந் நாராய ணனுக்கே அடிமை என்ற உணர்வுடன்கூடிய மனநிலை தோழி கூற்ருக வெளியிடப்பெறுகின்றது என்பது ஆன்ருேர் துணிபு. திருவாய்மொழியில் தோழியின் பாசுரமாக வரும் மூன்று பதிகங்களும்" பிரணவத்தி லுள்ள உகாரத்தின் பொருளான அநந்யார்ஹத்து வத்தை வெளியிடுகின்றன. பெண் பிள்ளையைப் பெற்று வளர்ப்பவள் தாய். அப் பெண் தக்க வயதை அடைந்ததும், பேராண்மைக்கு இருப்பிடமாகவுள்ள தலைவனிடம் கழிபெருங் காதலை உடையவளாகின்ருள். அவன் இருக்கும் இடத்தைப் போய்ச் சேரவேண்டும் என்று பதறுகின்ருள். ஆனல், அவளது பதற்றத்தைத் தடுத்து நிறுத்துகின்ருள் தாய். தலைவனே தலைவி இருக்கும் இடத்திற்கு வரவேண்டும் என்பது நடைபெறவேண்டிய ஒழுங்குமுறை என்றும், அங்ங்னமின்றித் தலைவியே தலைவனிருக்கும் இடத்திற்கு புறப்படுவது குலமரியாதைக்குச் சிறிதும் பொருந்துவ தன்று என்றும் நினைக்கின்ருள் தாய். திருமந்திரத்தின் இரண்டாவது சொல்லாகிய நம: என்பது இந்நிலையைக் குறிக்கின்றது. இச்சொல்லை ந+ம: என்று இரண்டாகப் பிரிக்கலாம். 'ம' என்பது வடமொழியில் எனக்கு உரிய வன்’ என்றும், 'ந' என்பது அல்லன்” என்றும் பொருள்படு கின்றன. அஃதாவது, எனக்கு நான் உரியவன் அல்லன்' என்றபொருள் கிடைக்கின்றது. இதல்ை நான் பிறனுக்கு (ஈசுவரனுக்கு) உரியவன்' என்பது பெறப்படுகின்றது. இம் முறையில் இச்சொல் ஈசுவர பாரதந்திரியத்தைத் 158. திருவாய். 4.6; 6.5; 8.9.