பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129


129 தெரிவிக்கின்றது. இன்னும் விளக்கிக் கூறினல், இச்சொல் ஞானத்தினல் ஏற்படும் சுதந்திரத்தன்மையை ஒழிக்கின்றது. அதன் காரணமாய் ஏற்படும் தன்னைத் தானே காத்துக்கொள்ள முடியும் என் னும் எண்ணத் தையும் நீக்குகின்றது. இனி, இவனைக் காத்து இரட்சிப் பவன் ஈசுவரனே ஆகின்ருன் என்ற துணிவு பிறக் கின்றது; அஃதாவது, ஈசுவரனே உபாயம் என்ற பொருள் கிடைக்கின்றது. இந்த மனநிலைதான் தாய் என்று குறிக்கப்பெறுகின்றது. திருவாய்மொழியில் தாய் பாவனையில் பேசின. ஏழு பதிகங்களும் ஈசுவர பாரதந்திரி யத்தையும், அவனே உபாயமாகின்ருன் என்ற கருத்தையும் தெரிவிக்கின்றன. பெற்ருேர் அல்லது உறவினர் கூட்டாமலேயே தலைவனுடன் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து, தலைவ னுடைய ஒப்புயர்வற்ற வனப்பு முதலியவற்றில் ஈடுபட்டு இருப்பவள் மகள் ; குடியின் கட்டுப்பாட்டையும் பாராமல் அவனைக் கிட்டியல்லது உயிர்வாழ்ந்திருக்க மாட்டேன்’ என்னும் பதற்றத்தையுடையவள் இவள். காலக்கழிவினை இவளால் பொறுக்க முடிவதில்லை. திரு மந்திரத்தில் பிரணவத்தாலும் நமஸ்ஸாலும் எல்லோ ருக்கும் சேவியாய் (தலைவனுய்) அறுதியிடப்பெற்றவன் எம்பெருமான். எல்லோருக்கும்புகலிடமாக இருப்பவனும் அவனே. பிரணவத்தாலும் நமஸ்ஸாலும் இவை உணரப் பட்ட பின்பு, நாராயணுய என்ற சொல்லினல் கூ றப் பெற்றுள்ள எம்பெருமானுடைய சொரூபம் ரூபம் குணம் வி பூ தி முதலியவற்றின்' சே ர் க் கை யாலுள்ள 169. சொரூபம் ஈசுவரனின் திவ்வியாத்தும சொரு பம்; ரூபம் - பகவானுடைய திவ்விய மங்கள விக்கிரகம்; குணம் - ஆன்ம குணம், விக்கிரக குணம்; ஆன்ம குணங்கள்ஞானம், சக்தி முதலியன; விக்கிரக குணம்.அழகு, மென்மை முதலியன; விபூதி-நியமிக்கப்படும் பொருள் (ஐகவரியம்). - - - 9-س-.g/BويB%