பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131


13; கொள்ளும் காமம் மங்கையர்மீது கொள்ளும் காமத்தி னின்றும் வேறுபட்டது. ஆயினும், சிற்றின்ப அநுபவ மாகிய காதலுக்குக் கூறப்பெறும் அகப்பொருள் துறைகள் யாவும் இந்த பகவத் விஷய காமத் திற்கும் கூறப்பெறும். சிற்றின்ப அநுபவத்திற்குக் கொங்கை முதலியன சாதனமாயிருப்பது போல, பகவத் விஷயாதுபவத்திற்குப் பரபக்தி, பரஞானம் பரமபக்தி இவை இன்றியமையாதனவாக இருப்பதால் அவையே கொங்கை முதலான சொற்களால் இவ்வாழ் வார்களின் அருளிச் செயல்களில் கூறப்பெறுகின்றன என்று சமயச் சான்ருேர் கொள்வர். காதல் சுவையின் தொடர்பு சிறிதுமின்றியே, பக்திச் சுவையின் அடிப்படையாகவே, பாசுரங்கள் அருளிச் செய்தல் கூடும். அங்ங்ணமிருக்க, காதல் சுவையையும் கலந்து பாசுரங்கள் அருளிச் செய்யப் பெற்றிருப்பதற்குக் காரணம் என்ன? உடல் நலத்திற்குக் காரணமாகிய வேப்பிலையுருண்டையை உட்கொள்ள வேண்டியவர்கட்கு வெல்லத்தை வெளியிற் பூசிக் கொடுத்து உண்பிப்பது போலவும், கொயின மாத்திரை கட்குச் சருக்கரைப் பாகு பூசி இனிப்புச் சுவையை உண்டாக்கித் தின்பிப்பது போலவும், சிற்றின்பம் கூறும் வகையால் பேரின்பத்தை நிலை நாட்டுகின்றனர் என்று பெரியோர்கள் பணிப்பர். இது கடையாய காமத்தினை யுடையவர்கட்குக் காட்டப்பெறும் உக்திமுறையாக இறையனர் களவியலிலும் கூறப் பெற்றுள்ளமை: ஈண்டு ஒப்பு நோக்கி உணர்தல் தகும். ஆழ்வார்களின் முறுகிய பக்தி நிலையை உணர்த்துவதற்கேற்ற ஓர் இலக்கிய மரபே இஃது என்று கொள்ளினும் இழுக் கில்லை என்க. 170. இறை. கள. நூற்பா-2 (உரை காண்க.)