பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132


132 இனி, இங்ங்னம் ஆழ்வார் பாடல்களில் வரும் ஒரு சில அகப்பொருள் துறைகளைச் சுருக்கமாக விளக்க எண்ணுகின்றேன். . - தூது. திருவண்டுர் எம்பெருமான்மீது நம்மாழ் வார் மட்டிலுமே மங்களாசானம் செய்துள்ளார். இது 'மகள் பாசுரமாக நடை பெறுகின்றது; தூதுவிடும் பதிக மாக அமைந்துள்ளது. இங்கு ஆழ்வார் குருகினங்கள், கருநாரை, புள்ளினங்கள்,அன்னங்கள், பூங்குயில்கள், கிளி, பூவை, வண்டினங்கள் இவற்றைத் துரது போகும்படி வேண்டுகின்ருர். இங்ங்ணம் பறவைகளைத் தூது விடு வதற்கு உட்பொருள் உண்டு. ஆசாரிய ஹிருதயம், "சேர்ப்பாரைப் பட்சிகளாக்கி, ஜ்ஞாக கர்மங்களைச் சிறகுஎன்று, குரு ஸ்ப்ரம சாரி புத்ர சிஷ்ய ஸ்தாருே பேசும்' |ஸ்ப்ரமசாரி - ஒரு சாலை மாளுக்கர்; ஸ்தாநே. இடத்தில்.j . . என்று குறிப்பிடுகின்றது. “விண்ணுேர் பிராளுர், மாசு இல் மலர் அடிக்கீழ் எம்மைச் சேர்விக்கும் வண்டு களே' என்று ஆழ்வாரே அருளிச் செய்துள்ளமையால், பகவத் விஷயத்தில் கொண்டு சேர்ப்வர்கள் பறவை களாகக் கொள்ளப்படுவர். இயல்பாகவுள்ள இரண்டு சிறகுகளைக் கொண்டு பறவைகட்கு எங்ங்னம் விசும்பில் பறந்து செல்லுதல் இயலுகின்றதோ,அங்ங்னமே ஞானம், ஒழுக்கம் (அதுட்டானம்) என்னும் இரண்டாலும் இறைவன் அடையப்படுகின்ருன் என்பது ஆன்ருேர் கொள்கை. எனவே, ஞானத்தையும் ஒழுக்கத்தையும் சிறகுகளாகக் கொள்ள வேண்டும். ஆசாரியர்களும் ஹிருதயம்.குத்திரம், 150. 12. திருவிருத்தம்-54