பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133


133 ஒருசாலை மாளுக்கர்களும் புத்திரர்களும் இறைவனை அடையும் பேற்றுக்குத் துணையாக இருப்பார்கள் என்பது அழகிய மணவாளப் பெருமாள் நாயனரின் கருத்து. இந்தப் பறவைகளிலும் அன்னம், வண்டு முதலிய வையாகச் சொல்லப்பெறுபவர்கள் இன்னர் இன்னர் போன்றவர்கள் என்று அருளிச் செய்யப்பெற்றுள்ளது." விரிப்பிற் பெருகும். திருவாய்மொழியில் தூதுவிடும் பதிகங்களாக உள் ளவை நான்கு. 'அஞ்சிறைய மடநாராய்', 'வைகல் பூங்கழிவாய்',பொன்னுலகாளிரோ'"எங்காணலகங் கழிவாய்". என்பவை அவை. இவண் குறிப்பிட்ட முதல் தூது எம்பெருமானுடைய வியூக நிலையை நோக்கி விடப்பட்டதென்றும், விபவாவதாரத்தை நோ க் கி இரண்டாந் தூது விடப்பட்ட தென்றும், பரத்து வத்தையும் அந்தர்யாமித்துவத்தையும் நோக்கி மூன்ருந் தூது விடப்பட்டதென்றும்,அர்ச்சாவதாரத்தை நோக்கி நான்காந்துாது விடப்பட்டதென்றும் ஆசாரியர் கள் மெய்ப்பித்துக் காட்டுவார்கள்". திருவண் வண்டுர் எம்பெருமான்மீது விடப்பட்ட தூதினை வேருேர் இடத்தில் விரிவாக விளக்கியுள்ளேன். ' அன்பர்களை அதனை நோக்கி அறியுமாறு வேண்டுகிறேன். 173. ஆசாரிய ஹிருதயம்-சூத்திரம் 153, 154, 155. காண்க. 174. திருவாய் 1-4. 175. திருவாய் 6.1. 176. திருவாய் 6.8. 177. திருவாய் 9.7 178. ஆசாரிய ஹிருதயம்-சூத்திரம் 156. . 179. சுப்புரெட்டியார், ந: மலைநாட்டுத் திருப்பதிகள் கட்டுரை.8. . . . . . . . .