பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136


#36 கூட்டிக் கொண்டு செல்வான். இங்ங்ணம் அவன் செல்லலே உடன் போக்கு’ என்று வழங்குவர் அகப் பொருள் நூலார். இத் துறையில் வரும் பெரிய திரு மொழிப் பதிகம் ஒன்றில் ஆழங்கால் படுவோம். பரகால நாயகி திருத்தாயாருடன் கண் உறங்கிக் கொண்டிருக்கின்றபொழுது, அவளை யாரும் அறியாமல் தன்னுடன் அழைத்துக் கொண்டு போகத் துணிந்த வயலாவி மணவாளன், திருத்தாயார் சிறிது கண்ணுறங் கினபொழுது அங்ங்ணமே அவளைக் கொண்டு சென்றுவிட் டான். உடனே துணுக்கென்று கண்விழித்துக் கொண்ட திருத்தாயார் படுக்கையைத் தடவிப் பார்க்கின்ருள் : மகளைக் காண்கின்றிலள். தன் மகள் வயலாலி மணவா ளனக் குறித்து வாய்வெருவினபடியை அறிந்தவளா தலின் அப்பெருமானே இவளைக் கொண்டு போயிருக்க வேண்டும் என்று நினைத்து எழுந்துப்பார்க்கின்ருள். தான் நினைத்தபடியே வயலாலி மணவாளன் தன் மகள் கையைப் பிடித்துக் கொண்டு போவதைத் தன் கண்ணுலே கண்டு வாய்விட்டுப் பேசுவதாக நடக் கின்றது இத் திருமொழி.* வயலாலி மணவாளன நாளும் கலந்து அநுபவிக்கவேண்டுமென்றிந்த ஆழ்வா ருடைய விருப்பம் இத் திருமொழியாக வடிவங் கொண்டது போலும். இதுபற்றிப் பக்தர்களிடையே ஒர் இதிகாசம் வழங்கி வருகின்றது. வயலாலி மணவாளன் பரகால நாயகியைக் கவர்ந்து சென்றது மறையாகவா அல்லது பலரு மறியவா என்ற வி ைஎழுகின்றது அவர்களிடையில். மகளைத் தாய் அணைத்துக் கொண்டு கிடக்கையில் எம்பெருமான் தனிமையில் வந்து யாரும் அறியா 183. பெரி. திரு. 3.7