பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137


137 வண்ணம் கவர்ந்து சென்றதாகப் பிள்ளை அமுதனுர் என்பார் உரைத்தாராம். அதனேக் கேட்டருளிய பராசர பட்டர், அங்ங்னம் வேண்டா; பலருங் கண்டுகொண்டி ருக்கையில் தீவட்டிக் கள்ளர் கொள்ளை கொண்டு போமாப்போலே கொண்டு சென்றதாக நிர்வகிப்பது எளிது’ என்றருளிச் செய்தாராம். இப்பதிகத்தில் இத் துறை அமைந்த அருமைப்பாடு பிறிதோர் இடத்தில் விளக்கப் பெற்றுளது'. ஆண்டுக் கண்டு மகிழ வேண்டு கிறேன். இத்துடன் நாலாயிரத்தைப்பற்றிய பேச்சினைத் தலைக்கட்டிக் கம்பராமாயணத்தில் நுழைய விரும்பு கிறேன். - - 2. கம்பராமாயணம் அன்பர்களே, கம்பராமாயணத்தில் வேங்கடத் தைப் பற்றிய குறிப்பு வருகின்றது. ஒரு பெருங் காப்பியத்தில் மல்ை கடல் நாடு வளநகர் பருவம் முதலிய பொருள்களைப் பற்றி ஆங்காங்குச் சுட்டிச் செல்லுதல் காப்பிய மரபாக இருந்து வருவதை நாம் அறிவோம். இக்கால ஆராய்ச்சி முறையில் கூறினல் கவிஞன் தரைநூல் பற்றிய (geography) குறிப்புகளைத் தருகின்ருன் என்று சொல்ல வேண்டும். கிட்கிந்தா காண்டத்தில் நாடவிட்டபடலத்தில் இத்தகைய குறிப்பு களைக் காண்கின்ருேம். இராமபிரானது கட்டளைப்படி சுக்கிரீவன் வானரப்படைத் தலைவர்களைச் சீதாபிராட்டி யைத் தேடும்படி எல்லாத் திசைகளிலும் விடுக்கின்ருன். ஒவ்வொரு திசையிலும் இரண்டு வெள்ளம் சேனையுடன் வானரவீரர்கள் செல்லுகின்றனர். தென்திசையை 184. சுப்புரெட்டியார், ந.: சோழ நாட்டுத் திருப்பதி இள் (விரைவில் வெளிவரும்)