பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138


iš8 நோக்கிச் செல்லும் வானர வீரர்களை நோக்கி அவர்கள் தேடவேண்டிய பல இடங்களைக் கு றிப்பிட்டு அவர்கள் செல்லும் வழியினை யெல்லாம் விளக்குகின்ருன் அக் கவிக் குலத்தரசன். அப்பொழுது வேங்கடத்தின் வளம், பெருமை, முதலிய செய்திகளைத் தருகின்றன். "வடசொற்கும் தென்சொற்கும் வரம்பிற்ருய் நான்மறையும் மற்றை நூலும் இடைசொற்ற பொருட்கெல்லாம் எல்லையதாய் நல்லறத்துக் கீருய் வேறு புடைசுற்றுந் துணையின்றிப் புகழ்பொதிந்த மெய்யேபோற் பூத்து நின்ற அடைசுற்றுந் தண்சாரல் ஓங்கியவேங் கடத்திற்சென் றடைதிர் மாதே "' (சறு - வரம்பு; அடை- தேன்கூடு.) "வேங்கடம் தனக்கு வடக்கில் வழங்கும் வடமொழிக்கும் தெற்கில் வழங்கும் தமிழ் மொழிக்கும் எல்லையாக உள்ளது. நான்கு மறைகளும் மற்றைச் சாத்திரங்களும் தம்மிடத்தல் கூறியுள்ள எல்லாப் பொருள்கட்கும் முடிவான பொருளேயுடையது; அதாவது அந்நூல்களில் நுவலப்பெறும் கடவுளர் யாவரினும் சிறந்த முழுமுதற் கடவுளான திருமாலைத் தன்னிடத்திற் கொண்டுள்ளது. அதற்கெல்லாம் வரம்பாய் நின்று திகழ்கின்றது. அதன் பெருமையை எடுத்துச் சொல்லி விளக்க உவமைப் பொருள் ஒன்றும் இல்லை. ஆயினும், புகழ்நிரம்பிய உடல் போல் பொலிந்து நிற்கின்றது என்று சொல்லி வைக் கலாம். அந்த மலே தேன் கூடுகள் நிரம்பப் பெற்ற தாழ்வரைகளால் குழப் பெற்றுள்ளது. நீங்கள் அம் T35 இட்கித் நாடவிட்ட 25