பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2


குலசேகராழ்வாரின் திருவேங்கடம் பற்றிய திருமொழி யில் ஆழங்கால்பட்டு உயர்ச்சியுடன் அடிக்கடி பேசுவதை நான் நேரில் கேட்டு அதுபவித்ததுண்டு. அவர்கள் எழுதிய பல கட்டுரைகளிலும் திருவேங்கடத்தைப் பற்றிய குறிப்புகள் வருங்கால் இந்த திவ்விய தேசத்தின் மீது அவரது ஈடுபாட்டைக் காணலாம். எனவே, 'திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும் என்ற தலைப்பில் மூன்று சொற்பொழிவுகள் நிகழ்த்தத் திட்டமிட்டேன். 'சங்ககால வேங்கடம்' என்ற தலைப்பில் இன்றைய என் பேச்சு அமைகின்றது. - இன்றையோர் கருதும் வேங்கடம்: இன்று பொது மக்களும் கற்றறிந்த புலவர்களும் திருப்பதி மலையையே வட வேங்கடம்’ என்று கருது கின்றனர். தேசியகவி பாரதியாரும் வடவேங்கடத்தை வட மாலவன் குன்றம்’ என்றே வழங்குவர். இதனை, 'நீலத் திரைக்கடல் ஓரத்திலே-கின்று கித்தம் தவம்செய் குமரிஎல்லை-வட மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு!' என்று தமிழ் நாட்டு எல்லேயை வகுத்துக் காட்டும் பாட வில் கண்டு தெளியலாம். தொல்காப்பியப் பாயிரத்தில் கூறப்பெற்ற தமிழ் கூறு நல் உலகமே பாரதியின் கருத் தில் புதிய வடிவம் கொண்டு நிற்பதை எளிதில் கண்டு தெளியலாம். தொல்காப்பியப் பாயிரமேயன்றி சங்க இலக்கியங்களில் வேங்கடத்தைப்பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன என்பதை அந்த இலக்கியங்களை ஆழ்ந்து கற்ருேர் நன்கு அறிவர். இந்தக் குறிப்புகளைத் 1. பாரதியார் கவிதைகள்-செந்தமிழ் நாடு-5.