பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141


141 (தோதவத்தி - துய்மையான ஆடை, துறை. துறைகள், தூல் - சாத்திரம்; மழை-மேகங்கள்; தடன். தாழ்வரைகள்; சின்னரம்-ஒர் இசைக்கருவி; வருடுதல்தடவுதல்; ஒதை ஓசை; போதகம் - யானை.) 'திருமலையில் உடல் தூய்மையும் மனத் துாய்மையும் உடைய அந்தணர்கள் இறங்கி மூழ்கி நீராடும் துறை களும் ஆறுகளும் உள்ளன ; முனிவர்கள் உறைகின்ற ஆசிரமங்கள் அங்கு உள்ளன; மேகங்கள் தவழும் தாழ் வரைகள் அம்மலையைச் சூழ்ந்துள்ளன. தேவ மாதர்கள் தங்கள் இசைப்பாட்டுக்கு ஒத்துவருமாறு கின்னரங்களின் நரம்புகளே வருடுந்தோறும் உண்டாகும் ஒசையில்ை யானைகளின் இளங்கன்றுகளும் புலியின் குட்டிகளும் தம்முள் பகையின்றி உளிங்கும் இடங்கள் அம்மலையில் உள்ளன' என்று கூறுகிருன். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருமலைக்குச் செல்வாது ஒதுங்கிச் செல்லுமாறு அடுத்து அறிவுறுத்துகின்ருன் அக் கோமகன். 'கோடுறுமால் வரையதனக் குறுகுதிரேல் உம்நெடிய கொடுமை நீங்கி வீடுறுதிர் ஆதலிளுன் விலங்குதிர்' [கோடு-சிகரங்கள்; மால்வரை பெரிய மலை; கொடுமை - கொடும் பாவங்கள்; வீடு உறுதிர்-மோட்ச மடைவீர்; விலங்குதிர் விலகிச் செல்லுங்கள்.) திருவேங்கட மலையை நெருங்கியவுடனே அப்புனிதத் தலத்தின் மகிமையால் கொடும்பாவங்கள் யாவும் மறைந்து வீடுபேறு கிடைத்துவிடுமாதலாலும், இதல்ை இராம காரியத்திற்குக் குந்தகம் விளையுமாதலாலும் அம் மலையை வணங்கின நிலையில் விலகிச் செல்லுமாறு அறி 189. கிட்கிந். நாடவிட்ட-29,