பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143


143 பாவம் தீரும்பொருட்டு நாரத முனிவரின் யோசனைப்படி அவன் தீர்த்த யாத்திரையை மேற்கொள்ள வேண்டிய தாயிற்று. கங்கையில் நீராடுகையில் அங்கு நீராடிய நாககன்னிகையரில் உலூபி என்பாளுடன் பாதாள லோகம் சென்று, அவளே மணந்து, நாகலோகத்தில் சின் குட்கள் தங்கி, இராவான மகளுகப் பெற்றுப் பூலோ கத்திற்கு வருகின்ருன் பார்த்தன். பின்னர் இமய மலையிலுள்ளதீர்த்தங்கள், யமுனே முதலிய தீர்த்தங்களில் நீராடி, தென்றிசை நோக்கி வந்தவன் திருவேங்க டத்தை அடைகின்றன். இதனை லில்லிபுத்துரார், 'பத்திக்கு வரம்பாகிய பார்த்தன் பலதீர்த்தம் அத்திக்கினும் எத்திக்கினும் ஆர்என்றவை ஆடி சித்திக்கொரு விதையாகிய தென்னுட்டினை அணுகி தத்திச்சொரியருவித்தட அரவக்கிரி சார்ந்தான்.' (வரம்பு - எல்லே; சித்தி - கருதிய பயன் கை கூடுகை; விதை - மூலம், தத்தி குதித்து; அரவக்கிரிசேடமலை, திருவேங்கடம்) என்று குறிப்பிடுவர். தென்னடு பல சிவத்தலங்கட்கும் விட்டுனுத்தலங்கட்கும் இடமாய் அமைந்து அடியார் கருதிய பயன் கைகூடுவதற்கு உரிய இடமாக இருத் தலால், சித்திக்கொரு விதையாகிய என்ற அடை கொடுத்து சிறப்பிக்கப் பெற்றது. திருமலையில் ஆகாய கங்கை, பாவவிநாசம், பாண்டவ தீர்த்தம், குமார தாரை, தும்புரு தீர்த்தம், கோன்ஏரி, ஆழ்வார்தீர்த்தம் போன்ற பல புண்ணிய தீர்த்தங்கள் உளதால், தத்திச் சொரி அருவி எனச் சிறப்பிக்கப் பெற்றுள்ளது. இங்ங்னம் திருவேங்கடம் வில்லிபுத்துாரார் வாக்கிலும் இடம்பெற்று நிலையான புகழுடன் வாழ்கின்றது. 191. ஆதிபர் - அர்ச்சுனன் தீர்த். 12.