பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145


திருவேங்கடத்தின்மீது எழுந்துள்ள நூல்கள் மூன்ருவது பொழிவு மார்ச்சு 7, 1974 பேரன்பர்களே, வணக்கம். இன்று நடைபெறுவது மூன்ருவது சொற் பொழிவு. இத்தொடரில் நடைபெறும் இறுதிச் சொற் பொழிவாகும் இது. சென்ற சொற்பொழிவில் ஆழ்வார் பெருமக்களாலும் இராமநுசராலும் திருவேங்கடம் பெரும் புகழ்பெற்றது என்பதைக் குறிப்பிட்டேன். இதல்ை கற்றவர்கள், கல்லாதவர்கள், பக்தர்கள் சுற்றுலாச் செல்வோர் முதலிய எண்ணற்ற மக்கள் நாடோறும் திருமலைக்கு வருவதும் போவதுமாக உள்ள னர். திருவேங்கட முடையான்மீது எண்ணற்ற கதை கள், செவிவழிச் செய்திகள் எழுகின்றன. இவை தல புராணத்திலும் இடம் பெறுகின்றன. சில தனிப் பாடல்களும் திருவேங்கட மலைபற்றிப் புனேயப்படு கின்றன. இவை யாவும் மேலும் மேலும் மக்களிடையே பக்திச்சுடர் கிளர்ந்தெழுவதற்குக் காரணமாக அமை கின்றன. ஒர் அழகிய பாடல் அழகிய நிகழ்ச்சியொன்றினைத் தாங்கி நிற்கின்றது. கேட்கும் வரத்தையெல்லாம் அளிக்கும் எம்பெருமான் ஏழுமலையானைக் காண்பதற்கு ஒரு நாள் ஒரு கூணன், ஒரு குருடன், ஒரு முடவன், ஓர் ஊமை என்ற நால்வர் மலை ஏறுகின்றனர். இவர்களைப் போல் ஊனுடம்பில் குறையில்லாவிட்டாலும் உள்ளத் வேங்.-10