பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146


#46 தில் குறையுடையவர்கள் பலரும் மலேஏறுகின்றனர். திடீ ரென்று ஒர் அதிசயம் நிகழ்கின்றது. கோலூன்றி நடந்த கூனன் நிமிர்ந்து ஓடவே தொடங்கிவிடுகின்ருன். குருட னுக்குக் கண்ணுெளி ஏற்பட்டு விடுகின்றது. அவன் வளைந்த கொம்பொன்றில் தொங்கிக் கொண்டிருக்கும் தேன்கூட்டைப் பார்த்து, “அதோ தேன்’ அதோ தேன்’ என்று அருகிலுள்ளவர்கட்குக் காட்டுகின்றன். அது வரை முடமாய்க் கிடந்து தட்டுத்தடுமாறி மலையேறிய நொண்டியோ தேன்கூட்டைப் பறிக்க மரத்தின்மீதே ஏறத் தொடங்கிவிடுகின்ருன். அதுவரை வாய்பேசா மல் ஊமையாக நடந்து சென்றவனும் வாய்விட்டுப் பேசத் தொடங்கிவிடுகின்ருன். அவன் எடுக்கும் தேனில் எனக்கும் ஒரு பங்கு என்று கேட்கின்ருன். இத்தகைய ஒரு கற்பனை நிகழ்ச்சியைப் படைக்கின்ருர் கவிஞர் ஒருவர். அவரும் இவர்களைப்போல் மலைமீது கோயில் கொண்டிருக்கும் மாதவனே வணங்குவதற்குச் சென்று கொண்டிருப்பவரே. இங்கனம் வழிவழியாக வளர்ந்து வரும் மாதவன்மீது மக்கள் கொண்ட நம்பிக்கை கவிஞரிடம் ஒரு பாட்டு வடிவம் பெறுகின்றது. ஆப் பாடல் : "கூன்கொண்டு சென்றவன் கூன்கிமிர்ந்தோட, குருடன் கொம்பில் தேன்என்று காட்ட, முடவன் அத்தேனை எடுக்க,அயல் தான்கின்ற ஊமை எனக்கென்று கேட்க, தருவன்வரம் வான்கின்ற சோலை வடமலை மேல்நின்ற மாதவனே." }, ஒரு பழம் பாடல்,