பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148


#48 லாயினும் தொண்ணுற்ருறு’ என்ற வரையறை கூறப் பெறவில்லை. இவற்றில் கூறப்பெருத சிற்றிலக்கியங்கள் பல இன்று வழக்கில் உள்ளன. இன்னும் காலத்திற் கேற்பப் பலப்பல இலக்கியங்களும் தோன்றுதல் கூடும். அவற்றை விலக்கல் எவராலும் இயலாது. எனவே, சிற்றிலக்கியங்களின் வகைகளையும் எண்வரையறையை யும் அறுதியிடுவது இயலாததொன்று என்பதை நாம் அறிதல் வேண்டும். ஆயினும், தமிழ் மொழியின் தலை சிறந்த இலக்கணமாகிய தொல்காப்பியத்தில் இத் தகைய நூல்கள் தோன்றுவதற்குரிய விதியை வகுத் துள்ள நுட்பத்தையும், அவரது எதிரதாக் காக்கும் கூர்த்த மதிநலத்தையும் நாம் போற்றத்தக்கவர்களாக இருக்கின்ருேம். - பெரும்பாலும், தொடர்நிலைச் செய்யுட்கு உரியன வாகத் தொல்காப்பியத்தில் கூறப்பெற்ற வனப்பு எட்டனுள்', 'விருந்து' என்பதும் ஒன்ருகும். இதனைத் தொல்காப்பியர், விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே." என்று குறிப்பிடுவர். அதாவது, முன்புள்ளார் சொன்ன நெறிபோய்ப் புதிதாகச் சொன்ன யாப்பின் மேலது இவ்வகை நூலாகும். இப் பொதுவிதி சொற்ருெடர்நிலை யாய் வரும் அந்தாதி, கலம்பகம் முதலான சிற்றிலக் கியங்கட்கும், அந்தாதியாய் வராத உலா, தூது, பிள்ளைத் தமிழ் முதலான பல இலக்கியங்கட்கும் இலக்கணமாக அமைந்துவிட்டது. இந்த விதியே சிற்றிலக்கியப் பரப்பு 2. தொல். பொருள். செய்யு. நூற்பா. 1 3. தொல்.செய்து நூற்பா 231