பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149


#43 விரிந்து எண்ணிறந்த இலக்கியங்கள் தோன்றுவதற்கும் ஏதுவாயிற்று. பொதுப்பண்புகள்: அன்பர்களே, இச்சிற்றிலக்கியங்களின் பொதுப்பண்பு களே ஈண்டுக் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாகும் என்று கருதுகிறேன். இவ்வகை நூல்களில் நூலறிவும் உலகியலறிவும் நிரம்பிய புலவர் பெருமக்களின் கற்பனை வளத்தைக் காணலாம். இவற்றில் காவியச் சுவைகள் களி நடம்புரிவதையும் கண்டுகளிக்கலாம். உவமை, உருவகம், தற்குறிப்பேற்றம், வேற்றுப்பொருள் வைப்பு முதலான இவற்றின் அணிநலன்கள் கற்பவர் கருத்தினைக் கவர்வன வாக இருத்தலேப் பார்க்கலாம். இவற்றுள் அமைந்திருக் கும் யமகம், திரிபு, சிலேடை போன்ற சொல்லணிகள் கற்பாரைத் திகைக்க வைக்கும் பெற்றியனவாக இருத்தலையும் காணலாம். இத்தகைய இலக்கியங்கள் பல திருத்தலங்கள்பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை அறியத் துணைசெய்வதையும் காணலாம். ஒவ்வொரு வகையிலும் பலப்பல நூல்கள் தோன்றி இந்தவகை இலக்கியச் செல்வத்தை மிகுதிப்படுத்தியுள்ளன. இவ் வகை இலக்கியங்களை இயற்றியவர்களுள் பிள்ளைப் பெருமாள் அய்யங்கார், குமரகுருபரர், சிவப்பிரகாசர், மகாவித்துவான் மீளுட்சி சுந்தரம்பிள்ளை ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் : ஈண்டு நாம் ஆராய எடுத்துக்கொண்ட நூல்களுள் திருவேங்கடத்தந்தாதி, திருவேங்கடமாலை எ ன் ற இரண்டு நூல்களை இயற்றியவர் பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் அவர்கள். இவர் சோழநாட்டில் திருமங்கை என்றும் திருப்பதியில் பார்ப்பனர் மரபில் பிறந்தவர்.