பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150


f56 இளமையிலேயே வடமொழி தென் மொழிகளே ஐயந் திரிபற ஓதி உணர்ந்தவர். வைணவ சமய நூல்களையும் கற்றுத் துறைபோய வித்தகர். ஆழ்வார் அருளிச் செயல்களில் ஆழங்காற்பட்டுத் திருவரங்கம் பெரிய கோயிலில் எழுந்தருளியிருக்கும் நம்பெருமாள் பக்கல் பேரன்பு பூண்டவர். அக்காலத்தில் ஆண்ட அரசன் அவையில் சிறந்த பதவி வகித்தவர். அரசன் அவருடைய பக்திவைராக்கியம் முதலியவற்றை அறிந்து அவருடைய வேண்டுகோட் கிணங்கக் கோயிலில் தனி இடமும் தளிகைப்பிரசாதமும் அவருக்குக் கிடைக்குமாறு ஏற்பாடு செய்தான். இவருடைய பக்திப் பெருக்கினல் இவருக்கு அழகிய மணவாளதாசர்' என்ற பெயர் வழங்க லாயிற்று. திருவரங்கத்தில் இருந்த காலத்தில் இவர் திருவரங் கத்தந்தாதி, திருவரங்கத்து மாலே, திருவரங்கக் கலம்பகம், சீரங்கநாயகரூசல், திருவேங்கடமாலை, திருவேங்கடத்தந்தாதி, அழகரக்தாதி, நூற்றெட்டுத் திருப்பதி அக்தாதி என்ற எட்டு நூல்களே இயற்றியருளினர். இவை இன்று "அஷ்டப் பிரபந்தம் என்ற பெயரில் ஒரே தொகுதியாக வழங்கி வரு கின்றது. இவர் இயற்றியனவாகச் சில தனிப்பாடல்களும் வழங்கிவருகின்றன. இவரைப்பற்றிப் பல கதைகளும் வழங்கி வருகின்றன. அவற்றை விளக்க ஈண்டுநேரமும் இல்லை; தேவையும் இல்லை. இறுதி நாளில் ஒரு நொண்டிப் பசு இவர்மேல் விழ அது விழுந்ததனலேற் பட்ட துன்பத்துடனே இவர், "துளவ துளவவெனச் சொல்லுஞ்சொற் போச்சே அளவி னெடுமூச்சு மாச்சே-முளரிக் 4. அழகிய மணவாளன்’ என்பது திருவரங்கத்து எம்பெருமானின் திருநாமம்,